முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர்கேநகர் தொகுதி காலியாக உள்ளது. இங்கு நடக்க இருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் முதல் கட்ட சட்டசபை தேர்தல் டிசம்பர் 9ம் தேதியும், 89 தொகுதிகளை கொண்ட இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 14ம் தேதி நடக்க உள்ளது. அந்த வகையில் 77 பேர் கொண்ட முதல் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை நேற்று காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது.
இன்று புதிய தேர்தல் ஆணையராக சுனில் அரோரா பொறுப்பேற்றார்.
முன்னதாக தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து நசீம் ஜைதி கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். இதனை அடுத்து தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருந்த ஏ.கே.ஜோதி, தற்காலிகமாக தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் காலியாக இருந்த தேர்தல் ஆணையர் பதவிக்கு முன்னாள் தகவல் ஒளிபரப்புத்துறை செயலாளர் சுனில் அரோராவை மத்திய அரசு புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்துள்ளது.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஜனநாயகத்தில் புதிய முயற்சியாக வாக்கு சாவடி அமைத்து பள்ளி மாணவ முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது
விரிவாக: நடுநிலைப் பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல்
வாக்கு என்னும் நாள் : 28/08/2017
பதவி ஏற்கும் நாள் : பின்னர் அறிவிக்கப்டும் .
போட்டியில் உள்ள மாணவ அமைச்சர்களின் துறைகள் :
1) மாணவ முதலமைச்சர்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இன்னும் 6 மாதங்கள் ஆகும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் கவுன்சிலர், நகராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கான பதவிகாலம் கடந்த ஆண்டு முடிவடைந்த நிலையில், இன்னும் தமிழகத்தில் இன்னும் இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடந்தபாடில்லை.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடக்கும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து, இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியதாவது:-
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 14-ம் தேதி துவங்கி ஜூன் 28-ம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூலை 1-ம் தேதி கடைசி நாள் ஆகும்.
வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு டெல்லி நகராட்சிகளுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Congress's Ajay Maken after casting vote at a polling booth in Rajouri Garden in Delhi #MCDelections2017 pic.twitter.com/6KXP3PeFGy
உ.பி. உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பு வெளியானது. இந்த கருத்து கணிப்பில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி முகம் தெரிகிறது. பஞ்சாபில் முதன் முறையாகப் போட்டியிட்ட ஆம் ஆத்மி மற்றும் அதன் எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் இடையில் இழுபறி நிலை வெளியாகி உள்ளது.
மணிப்பூர் சட்டப் பேரவைக்கு இன்று முதல்கட்டமாக 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அங்கு காலை அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் சண்டல் மாவட்டத்தில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவானது.
தொடர்ந்து 7.42 மணியளவில் இந்தியா - மியான்மர் எல்லையில் மீண்டும் நில நடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி உள்ளது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நில நடுகத்திதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
மும்பை மாநகராட்சி தேர்தலில் இறுதி முடிவுகள்.
சிவசேனா 84 , பாஜக 82, காங்கிரஸ் 31, தேசியவாத காங்கிரஸ் 9, எம்என்எஸ் 7, எஸ்.பி. 6, எம்.ஐ.எம் 3, ஏபிஎஸ் 1, சுயேட்சை4.
தற்போதிய நிலவரப்படி சிவசேனா கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டுவருகின்றன. இதில், மும்பை மாநகராட்சியைப் பொருத்தவரையில், இந்த முறை பா.ஜ.க.வும், சிவசேனாவும் தனித்தனியாக போட்டியிட்டன.
மும்பை உட்பட மராட்டிய மாநிலத்தில் 10 மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
மராட்டிய மாநிலத்தில் மும்பை, தானே, உல்லாஸ்நகர், புனே, பிம்பிரி சிஞ்ச்வாட், சோலாப்பூர், நாசிக், அகோலா, அமராவதி, நாக்பூர் ஆகிய 10 மாநகராட்சிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.. இந்த தேர்தல் களத்தில் 10 மாநகராட்சிகளிலும் உள்ள 1,268 வார்டுகளில் மொத்தம் 9,199 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மும்பை மாநகராட்சியில் மட்டும் 2 ஆயிரத்து 271 பேர் போட்டியிடுகிறார்கள்.
அரசியல் கட்சிகள் பெயர் கூறாதவர்களிடம் இருந்து 2000 ரூபாயிக்கு மேல் நிதிபெற தடைவிதித்து சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில் ஓட்டுக்கு பணம் கொடுத்தல் மற்றும் பணப்புழக்கம் குற்றச்சாட்டு காரணமாக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த 4 தொகுதிகளுக்கும் கடந்த 19-ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. அரவக்குறிச்சி 81.92 சதவீதமும், தஞ்சையில் 69.02 சதவீதமும், திருப்பரங்குன்றத்தில் 70.19 சதவீதமும், நெல்லித்தோப்பில் 85.52 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
அணுவிஞ்ஞானி, இந்திய ஏவுகணை நாயகன் என்று புகழப்பட்ட அப்துல் கலாம் 2-வது முறையாகவும் அவர் ஜனாதிபதியாக வர வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால் அரசியல் சூழ்நிலை காரணமாக அவர் பின்வாங்கியது தெரியும். ஆனால் அவர் போட்டியிட விரும்பினார் என்பது அவர் எழுதிய கடிதத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.