டெண்டர் விதிமுறையை கண்டித்து எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.இதனால் சமையல் எரிவாயு தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் சிறப்புப் பேருந்துகள் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படும். அதற்கான முன்பதிவும் இன்று முதல் தொடங்கப்படும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில், சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று நள்ளிரவில் திடிரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்!
வெகுநாட்களாக தங்களக்கு சம்பள உயர்வு வழங்காததால் இந்த திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டதாக ஊழியர்கள் தெரிவித்தினர்.
கேரளாவில் உயர்ந்து வரும் எரிபொருள் விலையை கண்டித்து ஐக்கிய ஜனநாயக முன்னணி, மாநிலம் முழுவதும் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததுள்ளது.
இதனையடுத்து கேரளா முழுவதும் வெறிச்சோடி காட்சியளிக்கின்றது.
Thiruvananthapuram (Kerala): United Democratic Front called for day-long strike to protest against rising fuel prices pic.twitter.com/vkwHkNmDUX
நாடு முழுவதும் நாளை மறுநாள் (அக்டோபர் 13-ம்) தேதி நடைபெறவிருந்த வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
பெட்ரோல், டீசல்களின் விலைகளை தினமும் நிர்ணயிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, தினசரி விலை மாற்றி அமைக்கபடுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளன. இதனால் பாதிப்படைந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, லாரி உரிமையாளர்கள் இன்று முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை துவங்குகிறது. வெளி மாநிலங்கள் செல்லும் லாரிகள், நேற்று முதல் நிறுத்தப்பட்டன.
நாடு முழுவதும், மொத்தம் 93 லட்சம் லாரிகள் நிறுத்தப்படுவதால், தீபாவளி சமயத்தில் தேவையான பொருட்கள் விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது.
நாட்டில், லாரிகள் வாங்கும் போதும், விற்கும் போதும், 28 சதவீதம், ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. இதனால், லாரி தொழிலில் நஷ்டம் ஏற்படுகிறது. இதை, ஒரு முனை வரியாக்க வேண்டும். உரிமம் வாங்கும் போதே, ஓராண்டுக்கான சுங்க கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் (FEFSI ) தங்களது வேலை நிறுத்த போராட்டத்தினை வாபஸ் பெறப்பட்டது.
முன்னதாக சினிமா படப்பிடிப்புகளில் வெளியாட்களை வைத்து பணியாற்றக்கூடாது என வலியுறுத்தி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பெப்சி கூட்டமைப்பு ஈடுப்பட்டது.
இந்நிலையில் தற்போது பெப்சி தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையே சுமுகமான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் பெப்சி தங்களது வேலை நிறுத்த போராட்டத்தினை வாபஸ் பெற்றனர்
இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி புதுக்கோட்டை மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து உள்ளனர் இலங்கை கடல்படை. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 49 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுக்கோட்டை மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெப்சி வேலைநிறுத்தம் விவகாரத்தில் கூடிய விரைவில் தீர்வு காண வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகையில்:-
"எனக்கு பிடிக்காத சில சொற்களில் ஒன்று "வேலைநிறுத்தம்" என்கிறது ஒன்று. எந்த பிரச்சனையாக இருந்தாலும் சுயகௌரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசிகூடிய சீக்கிரம் தயாரிப்பாளர் சங்கமும், பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமுகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள்"
போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் முடிவு காணப்பட்டுள்ளதால், இந்த முடிவுக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்று தென்னூரில் உள்ள, பெரிய நாச்சியம்மன் கோயில் குளம் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட திமுக செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்றார். அப்பொழுது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
தமிழகம் முழுவதும் 2_வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
சென்னை உட்பட மாநிலத்தின் பெரும்பாலான ஊர்களில் அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க கூடுதலாக தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், தற்காலிக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களைக் கொண்டு குறைந்த அளவிலான அரசுப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 30-ம் தேதியிலிருந்து லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வு, வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் தொகை உயர்வு உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தென்னிந்திய மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் இன்று 7-வது நாளாக வேலைநிறுத்ததில் ஈடுப்பட்டு வருகின்றனர்
இந்த போராட்டம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டில்லி, மேற்குவங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கவில்லை.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது, புதிய பென்ஷன் திட் டத்தை கைவிட வேண்டும், சம்பள உயர்வு, தொழிலாளர் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.