எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய டைட்டானிக் கப்பலை எடப்பாடி பழனிச்சாமி ஓட்ட தெரியாமல் ஓட்டி பாறையில் முட்டி சுக்கு நூறாக ஆக்கிவிட்டதாக நடிகர் செந்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அரசியலில் பல்வேறு இணைப்பும், விலகலும் தினசரி வாடிக்கையாகிவிட்டது. பிரபல நடிகரும், நகைச்சுவை நடிகருமான செந்தில் பாஜகவில் இணைந்தார்.
நடிகர் செந்தில் மற்றும் டி.டி.வி.தினகரன் மீதான வழக்குக்கு இடைக்கால தடை விதித்தது மதுரை ஐகோர்ட்.
செய்தியாளர்களுக்கு நடிகர் செந்தில் பேட்டி அளித்த போது தன்னை தகாத வார்த்தையில் கடுமையாக விமர்சித்து பேசியதாகவும், டி.டி.வி.தினகரனின் தூண்டுதலின் பேரில் நடிகர் செந்தில் தன்னை அவதூறாகப் பேசியதாக எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் திருச்சி தொகுதி எம்.பி. குமார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே திருச்சி போலீசார் நடிகர் செந்தில் மற்றும் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகர் செந்தில் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சிலர் செந்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டதாகவும் வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பினார்கள்.
இதை அறிந்த செந்தில் வதந்திக்கு முற்று புள்ளி வைத்தார். மேலும் அவர் கூறியது. வாட்ஸ்-அப்பில் வரும் செய்தியை யாரும் நம்பவேண்டாம். அது வெறும் வதந்தி. எனக்கு வேண்டாத சிலர் இவ்வாறு பண்ணியிருக்கிறார்கள். ஆண்டவன் புண்ணியத்திலும் மற்றும் "அம்மா" புண்ணியத்திலும் நான் நன்றாக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.