"எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் டைட்டானிக் கப்பலை இபிஎஸ் சுக்கு நூறாக்கிட்டார்” நடிகர் செந்தில்

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய டைட்டானிக் கப்பலை எடப்பாடி பழனிச்சாமி ஓட்ட தெரியாமல் ஓட்டி பாறையில் முட்டி சுக்கு நூறாக ஆக்கிவிட்டதாக நடிகர் செந்தில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.   

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : Apr 5, 2024, 01:18 PM IST
  • அண்ணாமலைக்கு ஆதரவாக பேசிய செந்தில்
  • டைட்டானிக் கப்பலை உடைத்த இபிஎஸ்
  • கச்சத்தீவை மோடி கையில் எடுத்துள்ளதாக செந்தில் பேசியிருக்கிறார்
"எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் டைட்டானிக் கப்பலை இபிஎஸ் சுக்கு நூறாக்கிட்டார்” நடிகர் செந்தில் title=

2024ஆம் ஆண்டிற்கான மக்களவை தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதை தொடர்ந்து, தற்போது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில், நடிகர்கள் பலர் தாங்கள் ஆதரவு தெரிவிக்கும் கட்சிக்காக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அண்ணாமலைக்கு ஆதரவாக நடிகர் செந்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். 

கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நடிகரும் பாஜக அமைப்பு செயலாளருமான செந்தில் சின்னையம்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய நடிகர் செந்தில், 

டைட்டானிக் கப்பல்..

அண்ணாமலை பெரிய பணக்காரர் இல்லை, விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். மோடியுடன் சேர்ந்து என் மண் என் மக்கள் யாத்திரையை நடத்தியுள்ளார். நான் முன்னதாக அம்மா கட்சியில் இருந்தேன் அந்த கட்சி சரியில்லாததால் , நல்ல கட்சி வேண்டும் என பாஜகவுக்கு வந்துவிட்டேன். புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவர் அம்மாவும், நல்லா டைட்டானிக் கப்பல் வைத்திருந்தார்கள் , அதை எடப்பாடி எடுத்து ஓட்ட தெரியாமல் ஓட்டி பாறையில் முட்டி சுக்கு நூறாக ஆக்கிவிட்டார்.அதேபோல கட்சியையும் உடைத்து எறிந்து விட்டார்கள். 

கச்சத்தீவை மோடி கையில் எடுத்துள்ளார். இந்தியா நல்லா நன்றாக இருக்க வேண்டும் என்றால் அது மோடி வந்தா தான் நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | கச்சத்தீவு விவகாரம்: 20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை.. செல்லூர் ராஜூ கிண்டல்!

கெளதமி பிரச்சாரம்..

பாஜக கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் கூட்டணி வைத்திருக்கும் முன்னாள் நடிகை கெளதமியும் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனுக்கு ஆதரவாக அதிமுக தலைமை கழகப் பேச்சாளர் நடிகை கெளதமி சென்னை காரப்பாக்கதில் கங்கை அம்மன் கோவில் தெருவில் திறந்து வெளி வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையை முடித்துக் கொண்டு வெளியேறிய நடிகை கவுதமி  பெண்மணிகளுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் 

வாக்காளர்கள் மத்தியில் பேசிய கெளதமி:

“5 வருடம் கழித்து முக்கியமான தருணத்தில் நிற்கிறோம். கடந்த 5 வருடத்தில் பலவற்றை நீங்கள் பார்த்துள்ளீர்கள், மழை வெள்ளம்,  மாதாமாதம் மின் கட்டண உயர்வு,விலை வாசி உயர்வு, போதைப் பொருள் நடமாட்டம் உள்ளிட்டவற்றை நீங்கள் பார்த்துள்ளீர்கள்.  இவற்றை எல்லாம் பார்த்த நீங்கள் நீங்கள் தேர்ந்தெடுத்த திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனை பார்க்கவில்லை.

உங்கள் தேவைகளுக்கு உங்களுக்காக உழைக்கும் ஒரு இளைஞர்தான் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன். திமுக ஆட்சிக்கு வந்த உடன் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது.அது அனைவருக்கும் உணவளித்த அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக்குகள்  மூடப்பட்டதுதான்” என்றார்.

மேலும் படிக்க | எங்கள பார்த்தா கட்சி இருக்காதுனு சொல்ற? பாஜகவை தாக்கிய இபிஎஸ் - கொண்டாடிய தொண்டர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News