ஆப்கானிஸ்தான் 20 ஆண்டுகால போருக்கு சாட்சியாக உள்ளது. எனவே அதற்கு அதிக சர்வதேச ஆதரவு தேவை என்று இஸ்லாமிய அமீரக துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதிலிருந்து, அங்கு பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கு உரிமைகளும் முழுமையாக பறிக்கப்பட்டு விட்டன.
தஜகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் வங்கிக் கணக்கில் தாலிபான்கள் தவறுதலாக பணத்தை அனுப்பிய நிலையில், தஜகிஸ்தான் இப்போது கை விரித்து விட்டதால், பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளது.
வரலாறு காணாத உணவுப் பஞ்சத்தில் சிக்கியுள்ள ஆப்கன் மக்கள், வாழ்வாதாரத்துக்காக கிட்னி உள்ளிட்ட உடல் உறுப்புகளையும், பெண் குழந்தைகளையும் விற்பனை செய்வதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
7 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள் ஃபிரோஸ்கோவில் உள்ள பள்ளிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஃபிரோஸ்கோஹ் கவுன்சிலின் முயற்சியால், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் கர் மாவட்டத்தில் உள்ள மசூதியில் ஏற்பட்ட வெடி வெடிப்பில் மசூதியின் இமாம் உட்பட குறைந்தது 12 பேர் காயமடைந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான கந்தஹார் நகரில் உள்ள ஷியா மசூதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் புதிய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் தாலிபான் தலைவரும் துணை பிரதமருமான முல்லா அப்துல் கனி பராதர், சில நாட்களுக்கு இறந்து விட்டார் என்ற வதந்தி பரவியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.