பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பீகார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்து வருகிறது.
மேலும் அங்குள்ள மகாநந்தா, கங்காய் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
பீகார் மாநிலத்தில் பெய்துவரும் கன மழையால் பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீட்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகளில் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் புதுடில்லி முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காஷ்மீரில், கல்வீச்சு சம்பவத்தில் இருந்து தப்பிக்க, ஒருவரை ஜீப் முன் ராணுவத்தினர் கட்டி வைத்து சென்ற சம்பவம் மிகவும் சரியான செயல் என ராணுவ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள புத்காம் என்ற பகுதியில், ஏப்ரல் 9-ம் தேதி இடைத் தேர்தல் பாதுகாப்புக்கு பணிக்காக ராணுவத்தை சேர்ந்த 53-வது ராஷ்டிரிய ரைபிள் படையை சேர்ந்த வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மீது இளைஞர்கள் தொடர்ந்து கற்களை வீசி தாக்குதலை நடத்தினர்.
காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி பகுதியில் கடந்த மே 1-ம் தேதி இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது 2 இந்திய பாதுகாப்பு எல்லைச்சாவடிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் ராக்கெட்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் திடீரென தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி பரம்ஜீத் சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை காவலர் பிரேம் சாகர் ஆகியோர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் மஸார்-இ-ஷரிப் என்ற இடத்தில் அமைந்துள்ள ராணுவ தளத்துக்குள் பணியாற்றி வரும் வீரர்கள் அந்த வளாகத்தில் இருக்கும் மசூதிக்குள் கடந்த 21-ம் தேதி ஜும்மா தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ராணுவ சீருடை அணிந்தபடி சில வாகனங்களுடன் அந்த முகாமுக்குள் நுழைந்த தலிபான் தீவிரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இயந்திர துப்பாகிகளால் சுட்டும், சிறிய ராக்கெட்களை ஏவியும், உடல்களில் கட்டிவந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தும் ஆவேச தாக்குதல் நடத்தினர்.
காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சரிவுகளில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்
காஷ்மீர் மாநிலம் குரேஸ் பகுதியில் நேற்று மாலை அடுத்தடுத்து இரண்டு பனிச்சரிவுகள் ஏற்பட்டது. இதில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலரது நிலை என்னவானது என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராணுவ கான்வாய் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 3 வீரர்கள் பலியானார்கள்.
காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாம்போர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த ராணுவ கான்வாய் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் பலியானார்கள். ராணுவ வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
யூரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. ஆனால் அது போன்ற எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை, தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவது போலியானது என பாகிஸ்தான் கூறி வருகிறது.தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரத்தை இந்தியா வெளியிட வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியது. மேலும் இந்தியாவிலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரசை சேர்ந்த சஞ்சய் நிருபம் உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலரும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என கேட்டு வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.