பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து லண்டன் தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடிக்கு (Nirav Modi) ஜாமீன் வழங்க இங்கிலாந்து உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சிறார்களை பாலியல் ரீதியாக சித்தரிக்கும் ஆபாச கன்டன்ட்டுகளை பரப்பினால் ஜாமீனில் வெளிவர முடியாததுடன் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் வருகிறது.
நடிகர் சந்தானத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
கட்டிட ஒப்பந்ததாரர் மற்றும் நடிகர் சந்தானம் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பும வழக்கில் நடிகர் சந்தானத்துக்கு சில நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரர் மற்றும் நடிகர் சந்தானம் இருவரும் தாக்கிக் கொண்டதால், போலீசார் இருவரும் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சந்தானம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை-28, கோவா, உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ஜெய் மற்றும் பிரேம்ஜி அடையாறு பாலம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது தடுப்புச்சுவரில் மோதி அவரது வாகனம் விபத்துக்குள்ளாகியாது
ஜெய் மற்றும் பிரேம்ஜி குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர் குடித்து விட்டு காரை ஓட்டிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த விசாரித்த போலீசார், குடிபோதையில் வாகனம் ஓட்டியது உள்பட 3 பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரனுக்கு டெல்லி கோர்ட் இன்று ஜாமின் வழங்கியது.
அதிமுகவில் இரு அணிகள் பிளவு காரணமாக ஆர்.கே.,நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதனையடுத்து இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற உரிமை போர் தேர்தல் கமிஷன் முன்பு நடந்தது.
இந்த நிலையில், அதிமுகவின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தை சசிலகா தரப்புக்கு சாதகமாகப் பெறுவதற்கு டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் ரூ.50 கோடி பேரம் பேசியதாக டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்தது.
தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு ஜாமீன் வழங்கியது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.
வைகோவின் ஜாமீன் மனு இன்று 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைகோவுக்கு நிபந்தனையின்றி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார்.
தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை திருவான்மியூர், பழைய மகாபலிபுரம் சாலையில் முனுசாமி என்ற முதியவரை கடந்த 2-ம் தேதி அதிகாலையில் வேகமாக வந்த சொகுசு கார் அவர் மீது மோதியது. இதில், முனுசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
கடந்த மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமது அணிக்கு வாக்கு சேகரிக்க தேமுதிக மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் கலந்துக்கொண்டு பேசி வந்தார்.
அப்போது அவர் திருப்பூரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் அமைச்சர் ஆனந்தன் என்பவர் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.