பருவமழை கிட்டத்தட்ட நாடு முழுவதும் பெய்து வருகிறது. பீகார், அசாம் உள்ளிட்ட வடகிழக்கின் பல மாநிலங்களில் பலத்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டதில் சுமார் 3 லட்சம் பேர் பாதிப்படைந்துள்ளனர். அவர்களை மீட்டு பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்ல ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பெரும்பாலான சாலைகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணத்தால் கொச்சியில் மெட்ரோ சேவை, விமான சேவை, ரயில் சேவை, பேருந்து சேவை என அனைத்தும் முடங்கியுள்ளது.
பீகார் மாநிலம் பாகல்பூரில் இன்று திறந்து வைக்கப்படவிருந்த பதேஸ்வரத்தான் கங்கை தடுப்பணை நேற்று உடைந்து சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. இந்த அணை ரூ 389 கோடி செலவில் கட்டப்பட்டது. இந்த அணையை கட்ட 1977-ம் ஆண்டு ஆணையம் அனுமதி அளித்தது. பல்வேறு காரணங்களால் கிட்டத்தட்ட 40 வருடங்களாக கழித்து தடுப்பணை கட்டப்பட்டு, திறப்பு விழாவுக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
இன்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரால் திறந்து வைக்கப்படுவதாக இருந்த அணை பாகல்பூரில் ஏற்பட்ட வெள்ளத்தால் தடுப்பணை உடைந்து சுற்றி இருந்த ஊருக்குள் வெள்ளம் புகுந்ததுள்ளது. இதனால் அணை திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை (செவ்வாய்) ஹார்வி சூறாவளியால் பதிக்கப்பட்ட டெக்சாஸினை பார்வையிட செல்கிறார்.
ஹார்வி சூறாவளியால் பாதிக்கப் பட்டவர்களின் பாதுகாப்பு, அவர்களது வாழ்வுரிமை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த பயணம் அமையும் எனவும், இந்த பயணம் எந்தவித இடையூறும் இன்றி நடைபெறும் எனவும் CNN ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார்.
"தற்போது மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு செயல்திட்டங்கள் குறித்து விவாதித்து வருகிறோம், திட்டமிடல் முடிந்தவுடன் அறிவிக்கப்படும் எனவும் வெள்ளை மாளிகை செய்தி ஊடக செயலர் சாரா ஹக்கபி சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பீகார் மாநிலத்தின் சீமாஞ்சலில் 24 மணி நேரம் கனமழை பெய்தது.
மேலும் கிவுன்கஞ்ச், பூர்ணியா அராரியா ஆகிய மாவட்டங்களிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள மகாநந்தா, கங்காய் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகளில் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
பீகார் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு இன்றும் (சனிக்கிழமை) தொடர்கிறது. பலி எண்ணிக்கை 170ஆக உயர்வு.
வெள்ளம் சூழ்நிலை மாநிலத்தின் 15 மாவட்டங்களில் மோசமாகி, மில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பீகாரில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,688 பஞ்சாயத்துகளில் மொத்தம் 108 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பீகார் இடர்பாடு சீராய்வு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விவசயிகளின் மனதை குளிர்விக்கும் வகையில் தமிழகத்தில் தொடர்மழை பெய்துவருகிறது. இதன் விளைவாய் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகம் மட்டும் அல்லாமல் கர்நாடகத்திலும் நல்ல மழை பொழிவதால் காவிரி நீர்பிடிப்பு பகுதியிலும் நீர்மட்டம் ஓரளவு சீராகி கொண்டிருக்கிறது.
கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளில் இருந்து அதிக அளவு நீர் திறக்கப்பட்டுள்ளது.
எனவே மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. மேட்டுர் அணையின் நீர்வர்த்து 7,249 கன அடியில் இருந்து 8,150 கன அடியாக உயர்ந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.