மகாத்மா காந்தியின் உருவத்தைப் போன்று செய்து, அதைத் துப்பாக்கியால் சுட்டவர்கள் தேச பக்தர்களாக இருக்கின்றார்கள். ஆனால் நான் என்ன தேசத்துரோகம் செய்தேன்? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பிய 2 சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது, இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் என தெரிவித்துள்ள முடிவு வரவேற்கக்கூடியது ஆனால் 22 மொழிகளில் மூத்த மொழி தமிழ் மொழியை தவிர்த்து வரும் இந்த முடிவு ஏற்புடையது அல்ல என வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், மதிமுக சார்பில் திரு. வைகோ அவர்கள் வேட்பாளராகப் போட்டியிடுவார் என மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது!
உயிர் பிழைப்பதற்காகத் தமிழகத்திற்கு அடைக்கலமாக வரும் ஈழத்தமிழர்களை சிறப்பு முகாமிற்குள் அடைத்து வைத்திருப்பது பெரும் கண்டனத்துக்குரியது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையின் போது நிர்வாகம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது என மாணவர்கள் அளித்த புகார்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்!
நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பத்தில் தேவை இல்லாத சான்றுகளை இணைக்க கூறியிருப்பது பெரும் கண்டனத்துக்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் வெற்றி காண முடியாமல் தோல்வி அடைந்த தமிழக மாணவிகள் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தனக்கு மிகுந்த வேதனையை தருகிறது என ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
அணுக் கழிவுகளை கையாளும் கட்டமைப்புகளை உருவாக்க முடியாத நிலையில், கூடங்குளத்தில் செயல்படும் அணுமின் உற்பத்தி நிலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் வகையில் செயல்பட்டு வரும் சக்திகளை கண்காணிப்போம், அவற்றை தடுப்போம் என அனைவருக்கும் அழைப்பு விடுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு ஆணை 70-ல் படி, 2019 ஆசிரியர் தகுதிகாண் தேர்வில் தமிழ்ப் பண்டிதர்கள் தேர்வு எழுதுவதற்கான தகுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை. இது பெரும் கண்டனத்துக்குரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இந்தித் திணிப்பை எதிர்த்து 1965 மொழிப் போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் என்பதை இந்தி எதிர்ப்புப் போரில் களம் கண்டவன் என்ற முறையில் எச்சரிக்கிறேன் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறியுள்ளார்.
உதவி மின் பொறியாளர் மொத்த பணி இடங்களில் 12% பேரை வெளி மாநிலங்களிலிருந்து தமிழக அரசு தேர்வு செய்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.