மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதிகாண தேர்வு மே 6ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 2018ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 6ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
நீட் தேர்விற்கு எதிராக சென்னையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த ஆர்பாட்டமானது அரசியல் நோக்கத்திற்கானது அல்ல மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரும் நிகழ்வு மட்டுமே என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த ஆர்பாட்டத்தில் ஸ்டாலின், திருமாவளவன், தா.பாண்டியன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் இந்த ஆர்பாட்டம் நடந்து வருகின்றது.
'நீட்' தேர்வினால் உயிர் இழந்த இளம்பெண் அனிதாவின் பெற்றோர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
நீட் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி அனிதா கடந்த செப்டம்பர் 1-ம் தேதி அன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் 12-ம் வகுப்பில் 1,176 எடுத்துள்ளார். இவரது மருத்துவ 'கட்ஆப்' 196.75 பெற்றார். எனினும் நீட் தேர்வில் இவரால் 700க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா நீட் தேர்வு பற்றி கருத்து கூறியிருந்தார். அதற்கு பதில் அளித்து பேசிய தமிழக மாநில பிஜேபி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நீட் தேர்வு பற்றி நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும்? பணத்திற்காக நடிப்பவர் மருத்துவ தேர்வு பற்றி பேசக்கூடாது என்று அதிரடியாக பதில் அளித்தார்.
இதனால் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யாவின் தலைமை ரசிகர்கள் மன்றம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியதாவது...
முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் நடக்கவிருந்த சட்டநகல் எரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. மாறாக வரும் 16-09-2017 சனிக்கிழமையன்று "உண்ணாநிலை அறப்போராட்டம்" நடைபெறும் என தொல். திருமாவளவன், தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
"முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் தமிழகமெங்கும் நாளை(09-09-2017) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த "நீட்-சட்ட நகல் எரிப்புப் போராட்டம்" ஆனது மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு தவிர்க்கப்படுகிறது.
சென்னையில் நீட் தேர்வை ரத்து செயக்கோரி பள்ளி மாணவிகள் தீடீர் சாலைமறியல் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனிதா மரணத்தை அடுத்து கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து பல போராட்டங்கள் அரசியல் கட்சி சார்பிலும், மாணவர்கள் சார்பிலும் நடைபெற்று வருகிறது.
திருச்சியில் நீட் தேர்வை ரத்தி செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய வந்த மாணவர்களை திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் சி.பி.ஐ. மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் மாணவர்களை சந்தித்து பேசினார்கள்.
அவர்கள் மாணவர்களிடையே பேச்சுவாரத்தை நடத்தினார்கள். போராட்டத்தை கைவிடுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டனர். மு.க ஸ்டாலின் மற்றும் நல்லக்கண்ணு கோரிக்கையை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெற்றனர்.
அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் சி.பி.ஐ. மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு ஆகியோர் மாணவர்களை சந்தித்து பேசினார்கள்.
நீட் தேர்வைனை ரத்து செய்ய கோரி வரும் 13-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எதிர்கட்சி தலைவர்' மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.