தேசிய அளவிலான எந்த தேர்விற்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதிகாண தேர்வு மே 6ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த தேர்வுக்கு, பிப்., 9ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. மார்ச், 9 வரை, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்றும் CBSE அறிவித்திருந்தது.
இதை தொடர்ந்து, சி.பி.எஸ்.இ., சார்பில், புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், 'நீட் தேர்வில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் விண்ணப்பத்தில், ஆதார் எண்ணில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அடிப்படையில், சுய விபரத்தை பதிவு செய்ய வேண்டும்.
ஆதார் தகவல்களும், பள்ளி விபரங்களும் வேறுபாடாக இருந்தாலும், ஆதார் எண் தகவல்களையே, விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். 'அதன்பின், பள்ளியில் உள்ள விபரங்களை, ஆதார் எண் அடிப்படையில் மாற்றி கொள்ள வேண்டும். மாறாக, தேவையற்ற வதந்திகளை நம்பி, தேர்வுக்கான பதிவுகளில் பிழைகளை ஏற்படுத்தி விட வேண்டாம்' என, சி.பி.எஸ்.இ., கூறியிருந்தது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு நடத்தும் சிபிஎஸ்இ, ஆதார் எண் கேட்டு மாணவர்களை வற்புறுத்தக்கூடாது மத்திய அரசு கூறியுள்ளது.
தேசிய அளவிலான எந்த தேர்விற்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது. நீட் நுழைவு தேர்வு எழுத ஆதார் கட்டாயம் என்ற சி.பி.எஸ்.இ.யின் அறிவிப்புக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய அளவிலான எந்த தேர்விற்கும் ஆதார் எண் கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Aadhaar matter: Attorney General told the Supreme Court that the Centre has not authorised CBSE to make Aadhaar card a mandatory ID for #NEET examination.
— ANI (@ANI) March 7, 2018