ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் அதிகமான வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர்.
விளையாட்டு என்பது தேவையற்ற ஆடம்பரம் என்ற நிலையில் தனது திறமையையும், விருப்பத்தையும் நிறைவேற்ற கடும் போராட்டங்களை சந்தித்த தமிழக வீரர் நாகநாதன் பாண்டி, ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்காக தடம் பதிக்கிறார்...
டோக்கியோவில் வைரஸ் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகிவிடக் கூடாது என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது...
2020 ஆம் ஆண்டில் நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டி கொரோனா காரணமாக ஒத்தி போடப்பட்டன. 2020 ஆம் ஆண்டில், ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.
இந்தியாவின் நட்சத்திர பூப்பந்து வீரரும் ரியோ விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனையுமான பி.வி.சிந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்பவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
டென்னிஸ் ஆட்டத்தின் மிகச்சிறந்த ஆட்டக்காரரும் 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான ரஃபேல் நடால் வியாழக்கிழமை டோக்கியோ விளையாட்டுகள் மற்றும் விம்பிள்டன் 2021 ஆகியவற்றிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
95 வயதான ஹாக்கி ஜாம்பவான் வீரர் மே 8 அன்று மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மூளையில் இரத்த உறைவு ஏற்பட்ட பின்னர் மே 18 முதல் அரை கோமாட்டோஸ் நிலையில் இருந்தார்.
ஒலிம்பிக்கில் சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு நாட்டின் உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜிம்னாஸ்டிக் தீபாகர்மாகர், பேட்மிண்டன் சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், துப்பாக்கிச்சுடுதல் வீரர் ஜித்துராய் ஆகிய நான்கு பேரும் இந்த விருதை பெறுகின்றனர்.
ரியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான மல்யுத்த கால் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை வீனேஷ் போகத் மற்றும் சீன வீரங்கனை சுன் யானன் ஆகியோர் மோதினர்.
ஊக்க மருந்து சர்ச்சையில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்ககேற்கயிருந்த இந்திய தடகள வீரர் ஒருவர் சிக்கியிருக்கிறார்.
குண்டு எறிதலில் ஆசிய அளவில் கோப்பைகள் பெற்றவர் இந்திரஜித். இவர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தரப்பில் செல்ல இருக்கும் வீரர்களில் ஒருவர் ஆவார். இவருக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் இவர் போட்டியில் பங்கேற்க முடியாமல் போயுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மல் யுத்த வீரர் நரசிங் மீதும் ஊக்க மருந்து புகார் கிளம்பியுள்ளது. அதேபோல் இந்திரஜித்தும் சிக்கியுள்ளார்.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் முகமது ஷாஹித் குர்கானில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.
முகமது ஷாகித் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் கடந்த ஏப்ரல் 14, 1960ல் பிறந்தார். தனது 19வது வயதில், பிரான்சு அணிக்கு எதிரான, ஜூனியர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக முதன் முதலில் விளையாடினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.