ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா நாளை நடைபெற இருக்கிறது. இந்த முதல் நாளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடிகர், நடிகைகள் இடம்பெற்று போட்டியை துவக்கி வைப்பர்.
இலங்கைக்கு எதிரான 2_வது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸை வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் நாயகனாக ஷிகார் தவான் தேர்ந்தெடுக்கப்ட்டார். மொத்தம் 4 இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு நான் ஹாங்காங்கில் நான் விடுமுறைக்கு கழித்து கொண்டு இருந்தேன். காயம் காரணமாக ஆட முடியாமல் இருந்தேன்.
ஆனால் இந்த தொடரில் விளையாடுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இப்போது நான் எனது பேட்டிங் அனுபவித்து வருகிறேன், ஏனென்றால் எல்லா நன்றாக ஆடி வருகிறேன். இது எனக்கு பெருமையாக இருக்கு என ஷிகார் தவான் கூறினார்.
மேன் ஆப் மேட்ச் ஹார்திக் பாண்டியா தேர்ந்தெடுக்கப்ட்டார். இவர் 3_வது டெஸ்ட் போட்டியில் கடைசி விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 96 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். மேலும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
நான் என் முதல் சதத்தை அடித்தலில் மகிழ்ச்சி அடைகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் இடம் பிடிப்பது ஒரு எளிதான காரியம் இல்ல. டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச அனுமதி கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. அணி வீரர்கள் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள் என ஹார்திக் பாண்டியா தெரிவித்தார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் சனிக்கிழமை அன்று பல்லேகலேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் ஷிகார் தவான்(119) மற்றும் ஹார்திக் பாண்டியா(108) இருவரின் சதத்தால் 487 ரன்கள் எடுத்தது ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் லக்ஷன் சந்தானன் 5 விக்கெட்டும், மாலிண்டா புஷ்பகுமார 3 விக்கெட்டும், விஷவா பெர்னாண்டோ 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இலங்கைக்கு எதிரான 2_வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 11_வது அரைசதத்தை எடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் விளையாட்டில் 2000 ரன்கள் கடந்து உள்ளார்.
பந்து வீச்சாளர்களான ரிச்சர்ட் ஹாட்லி, இம்ரான் கான் மற்றும் இயன் போத்தம் ஆகியோரை அடுத்து ஒரு பந்து வீச்சாளர் டெஸ்ட் விளையாட்டில் 2000 ரன்கள் கடந்தது அஸ்வின் மட்டுமே.
இந்தியாவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆணடுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது.
இதில், விராட் கோலிக்கு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் மூன்று முறை இவ்விருது பெறும் முதல் இந்திய வீரர் என்ற பெருமை கோலிக்கு கிடைத்துள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அவ்வகையில் இந்த ஆணடுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று பெங்களூருவில் நடைபெற்றது.
இதில், விராட் கோலிக்கு மிகச்சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட்டது. இதன்மூலம் மூன்று முறை இவ்விருது பெறும் முதல் இந்திய வீரர் என்ற பெருமை கோலிக்கு கிடைத்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் 25வது முறையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இந்த சாதனையை எட்டிய வீரர் என்ற பெருமை அஷ்வின் பெறுவார். அஷ்வின் தனது 88-வது டெஸ்ட் போட்டியிலேயே இந்த சாதனையை எட்டியுள்ளார். முன்னதாக, இலங்கையின் முரளிதரன் தனது 100-வது டெஸ்டில் இதை நிகழ்த்தியிருந்தார்.
அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஷ்வின் 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். அவர் இதுவரை 269 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அனில் கும்ப்ளே (619), கபில் தேவ் (434), ஹர்பஜன் சிங் (417), ஜாகீர் கான் (311) ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக புனே நகரில் நேற்று நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2016-ம் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு
ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2016-ம் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பை அஸ்வின் பெறுகிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற்று, 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்ற நிலையில் 5_வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சென்னையில் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. டாசில் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் இன்னிங்சில் அந்த அணி 477 ரன் எடுத்தது.
இந்தியாவின் தரப்பில் ராகுல் 199 ரன்களும், கருண் நாயர் 303 ரன்களின் முச்சத உதவியோடு 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.