ஆடவர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்படும் ஆர். அஸ்வின் மற்றும் மகளிர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் மிதாலியின் பெயரை கேல் ரத்னா விருதுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அர்ஜுன் விருதுக்காக தவானை மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்...
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேகர் அடிக்கடி வீரர்கள் குறித்து கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம். அண்மையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றி அவர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இந்திய பந்து வீச்சாளர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமாக விளையாடியுள்ளனர்.
டெல்லி அணியின் முன்னணி பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டித் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது
இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில், முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடினர். இந்த மூன்று வீரர்களும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்கள்.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் (IND vs ENG) முடிந்தது. IND vs ENG டெஸ்ட் தொடரை வென்ற பிறகு, ரவிச்சந்திரன் அஸ்வின் மனைவி ப்ரீதி நாராயணன், கணவரை வீட்டுக்கு விரைவில் வரச் சொல்லி அன்பை பகிர்ந்து கொண்டார்.
இந்தியா இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடந்த நான்காவது டெஸ்டில் சனிக்கிழமையன்று இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தியா இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் துவங்கியது. அபாரமாக பந்து வீசிய இந்திய அணி இங்கிலாந்து அணியை 205 ரன்களுக்கு ஆட்டமிழக்க வைத்தது.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் போட்டித் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அற்புதமாக ஆடி வெற்றி பெற்றது. அதன் ஏதிரொலியாக இந்திய அணியின் ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரிஷப் பந்த் ஆகியோர் டெஸ்ட் தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.
இந்தியா இங்கிலாந்து இடையில் நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
புதிதாக அமைக்கப்பட்ட கரும் பச்சை சேப்பாக்கம் மைதானம், கொரோனா தாக்கத்திற்கு பிறகு சென்னை ரசிகர்கள் எழுப்பும் உற்சாகக் குரலை இன்று காலை முதல் கேட்கும். இது இந்திய அணிக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்று சொல்லலாம்.
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தான் விளையாடிய 17 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக சராசரியாக 62 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய மண் அவருக்கு எப்போதுமே நல்ல அனுபவத்தை தருகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை செய்துள்ளார்.
எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தனது அபார ஆட்டத்தைத் தொடர்ந்தார். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்களை எடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.