இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், தான் ஃகோல்ப் விளையாடுவதை தனது ட்விட்டார் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புத்தாண்டு பிறந்த்தையொட்டி, இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தன் கையாலே சமைத்து நண்பர்களுக்கு விருந்து வைத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணி முன்னாள் வீரர் சச்சின். இவர் ரசிகர்களால் 'கிரிக்கெட் கடவுள்' என அழைக்கப்படுகிறார். இவர் சர்வதேச போட்டிகளில் 10-ம் எண் பொறித்த 'ஜெர்சியை' அணிந்து விளையாடினார். இவரது ஓய்வுக்கு பிறகு இந்த எண் யாருக்கும் தரப்படாமல் இருந்தது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இணைத்து உள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோலிக்கு இது 30-வது சதம் ஆகும். இந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை கோலி சமன் செய்துள்ளார்.
அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். சச்சின் சாதனை முறியடிக்க கோலிக்கு இன்னும் 20 சதங்கள் தேவை.
கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு அடையாளம் பதித்த சச்சின் அவர்களின் ஜெர்சி எண்ணான 10 -னை ஷர்துல் தாக்கூர்க்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
தற்போது இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய அணிவிளையாடி வருகிறது. இந்த தொடரின் நான்காவது போட்டியில் அறிமுகமானவர் தான் இந்த ஷர்துல் தாக்கூர். போட்டியின் பொது அவர் சச்சின் டெண்டுல்கரின் எண்ணான 10னை பொறித்த ஜெர்சியை அணித்திருந்தார்.
தற்போது இந்த விவகாரம் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சச்சினுக்கு அள்ளித எண்ணினை வேறு யாருக்கும் தரகூடாது என சமுக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்திய கிரிகெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய ராஜ்யசபாவின் எம்.பி., ஆவார். அவர் இன்று (ஆகஸ்ட் 3) நடைபெற்ற ராஜ்யசபா அமர்வில் கலந்துகொண்டது குறித்து வலைதளங்களில் பரவலாக கேலி செய்யப்பட்டு வருகிறது.
டெண்டுல்கர் இந்த அமர்வில் கலந்து கொண்டார் என்றபோதிலும், எந்த கேள்விகளையும் அவர் கேட்கவில்லை. அதுசமயம் குத்துச்சண்டை வீரர் மேரி கோம் நாடாளுமன்றத்தின் மேல் மாளிகையில் அமைதி காத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களது ராஜ்யசபா வருகையை பற்றி இரக்கமற்ற முறையில் கேலி செய்தது, மக்களின் கவனதை ஈர்த்து உள்ளது.
சென்னையில் இன்று தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சியை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்.
கடந்த 2014-ம் ஆண்டு துவங்கப்பட்ட புரோ கபடி லீக்கின் 5-ஆவது சீசனில் முதல் முறையாக கூடுதலாக நான்கு அணிகள் பங்கேற்கின்றன. ஏ, பி, என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, மொத்தம் 12 அணிகள் இந்த சீசனில் விளையாடுகின்றன. மொத்தம் 138 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தை சேர்ந்த தமிழ் தலைவாஸ் அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.