SC, ST பிரிவினரால் தெரிவிக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக வழக்குகள் பதிவு செய்ய தடை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருப்பது. இதன் காரணமாக பஞ்சாப் முழுவதும் முழு அடைப்பு போடப்பட்டுள்ளது. இதனால் இன்று +2, 10-ம் வகுப்புகளுக்கு நடைபெற இருந்த CBSE தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
'நீட்' தேர்வினால் உயிர் இழந்த இளம்பெண் அனிதா தற்கொலை பற்றி 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
NEET aspirant #Anitha's suicide case: Supreme Court asks Tamil Nadu Chief Secretary to file an affidavit within two weeks.
— ANI (@ANI) September 18, 2017
ஆதார் எண் கட்டாயம் என்ற மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்கியது.
அதில், இந்திய அரசியல் சாசனத்தின்படி, தனி மனித ரகசியம் காப்பது என்பது அடிப்படை உரிமையே என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என இன்று சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
நீட் தேர்வு முடிவுக்கு எதிராக மாணவ அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட், நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது.
நீட் தேர்வில் மாறுபட்ட கேள்விதாளை வழங்கியது ஏன் சி.பி.எஸ்.இ.,யின் இந்த செயல் ஏற்று கொள்ள முடியாது. இதுபோன்ற தவறுகள் வருங்காலத்தில் ஏற்படாமல் இருக்க வேண்டியவை பற்றி அறிக்கை அளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
போலி சாதி சான்றிதழ் கொடுத்தது தெரிய வந்தால் பணி அல்லது பட்டத்தை உடனடியாகப் பறிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணி பெற்றிருந்தால் அவர்களை பணிநீக்கம் செய்யலாம் என மகாராஷ்டிர அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மகாராஷ்டிர அரசின் உத்தரவு செல்லாது என மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளால் வழக்கு தொடரப்பட்ட நீதிபதி கர்ணனுக்கு தற்போது மனநிலை குறித்த மருத்துவ பரிசோதனை நடத்துமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இதற்காக கொல்கத்தா மருத்துவமனையில் வருகிற மே 5-ம் தேதி மருத்துவ பரிசோதனை செய்யப்படவேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
முன்னதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளால் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட கொல்கத்தா நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகப் பதவி வகிக்கும் தன் மீது வழக்கு தொடர யாருக்கும் உரிமையில்லை என ஆஜராக மறுத்தார்.
லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை தாமதப்படுத்தக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளது சுப்ரீம் கோர்ட்.
ஊழலில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் குறித்து மக்கள் புகார் அளித்தால், அது தொடர்பாக விசாரணை நடத்தி தண்டிக்கக் கூடிய அதிகாரம் லோக்பால், லோக் ஆயுக்தா ஆகிய அமைப்புகளுக்கு இருக்கிறது. இந்த அமைப்பின் தலைவர்களை நியமிக்க நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரையும் சேர்த்து குழு அமைக்கப்பட வேண்டும் என்பது தான் லோக்பால் சட்ட அமைப்பு விதி.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஆதித்யநாத் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் மாட்டிறைச்சிக்குத் தடை, பெண்களை கேலி செய்வோரை பிடிக்க தனிப்படை, பள்ளிகளில் கட்டாய யோகா என பல்வேறு அதிரடியாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
இந்நிலையில் மாநில மேம்பாட்டு மற்றும் ஊழலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவமனைகளில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,க்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக அதிரடி அறிவிப்பை ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இருந்து ஜெயலலிதா பெயரை நீக்குமாறு கர்நாடகா அரசு இன்று மனுதாக்கல் செய்ய உள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு கோர்ட் அவருக்கும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 வருடங்கள் சிறை தண்டனை விதித்தது.
கர்நாடக சிறப்பு நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஜெயலலிதா உள்ளிட்டோர் கர்நாடக சுப்ரீம் கோர்டில் மேல்முறையீடு செய்தனர். கர்நாடக சுப்ரீம் கோர்ட்டில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு ஒரிரு நாட்களில் அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இன்று அறிவித்தார்.
நீதிமன்றங்களில் தினமும் வழக்கு விசாரணைகள் துவங்கப்படும் முன் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட வேண்டும் என்று தொடரப்பட்ட மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துவிட்டது.
பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை போல ‘வாட்ஸ்-அப்’ வலைத்தளத்தையும் பெரும்பாலான பயன்படுத்தி வருகின்றனர். இந்த ‘வாட்ஸ்-அப்’ செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என கதீர் யாதவ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
மனுவில் கூறப்பட்டது:-
கடந்த 2 வருடமாக ஜவகர்பாத் பகுதியில் உள்ள 260 ஏக்கர் பூங்காவை ஆக்கிரமித்தவர்களை வெளியேற்ற உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் கோர்ட்டு உத்தரவின் பெயரில் போலீஸ் நடவடிக்கை எடுத்தது. அப்போது கலவரம் வெடித்தது. இந்த மோதலில் 2 போலீசார் அதிகாரிகள் உள்பட 29 பேர் கொல்லப்பட்டனர். பல பேர் காயம் அடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கேரள கடல் எல்லையில் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இத்தாலி வீரர்கள் 2 கேரளா மீனவர்களை சுட்டுக்கொன்றனர். இதனால் இத்தாலி மாலுமிகளான இரண்டு பேர் மிஸிமிலினோ லட்டோர் மற்றும் சல்வடோர் கிரோன் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழு கூடியது. அக்குழுவில் நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கௌண்டர்களையும் பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதை பற்றி விவாதங்கள் நடைபெற்றது. அதற்கான சட்ட திருத்த மசோதா நிறைவேற்றுதல் பற்றி ஆலோசனை நடைபெற்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.