தமிழக அரசு மத்திய அரசு உதவியோடு அமெரிக்காவில் உள்ள தொன்மையான சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறை முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வர சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பேரிடர் பற்றி உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன தெரியும் என்றும், முக்கிய அமைச்சர்கள் இருக்கும் போது மீட்பு பணிக்கு உதயநிதியை அனுப்புவது ஏன் என்றும் விருதுநகரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கனமழையால் தென் மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நெல்லை சந்திப்பு வரை ரயில் போக்குவரத்து சீராகியுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 26-ம் தேதியும், ஆருத்ரா தரிசனம் 27-ம் தேதியும் நடைபெற உள்ளது.
ஒட்டப்பிடாரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால், குடை பிடித்தவாறு அரசு பேருந்துக்குள் பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டதால் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.