மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தும் கால அட்டவணையை மூன்று மாதங்களுக்குத் தளர்த்திடக் கோரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சமீப நாட்களாக பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் அதிக அளவில் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்த புகைப்படங்கள் அனைத்தும் artificial intelligence மூலம் உருவாக்கப்பட்டது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து குறைந்து வரும் நிலையில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு நான்காயிரம் கன அடியில் இருந்து 402 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல் துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி அருகே வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விவசாயி பலியான விவகாரத்தில், உயிரிழந்தவரின் உறவினர்களிடம் உத்தமபாளையம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.