தமிழகத்தில் கோடைகாலம் தொடங்க உள்ளது. கோடைகாலத்தில் ஏற்படும் வறட்சியைச் சமாளிக்கவும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்கவும் ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்
கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது குற்றச்சாட்டு எழுகிறது. எனவே சென்னை உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கை ஏற்று பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டுள்ளார். அதைக்குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல காவல் துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் குடும்பத்துக்கு பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 3 லட்சம் வழக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்னிலையில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நடைபெற்ற விவாதம் பற்றி பார்ப்போம்.
இன்று (14.11.2017) தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
கந்துவட்டி புகாரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்யும் வகையில் பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலாவை நேற்று கைது செய்தனர். கைதான இவர் இன்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டில் ஆஜரான இவர் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சென்னையை சேர்ந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா. சில நாட்களுக்கு முன்பு கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ வைத்து ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டனர்.
கந்துவட்டி புகாரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கிண்டல் செய்யும் வகையில் பிரபல கார்ட்டூனிஸ்டை அவதூறு பரப்பும் வகையில் இருந்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை சேர்ந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா. சில நாட்களுக்கு முன்பு கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ வைத்து ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேற்று திரைப்படத்துரையினர் சந்தித்தனர்.
அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை அமைப்பின் இயக்குனர் டாக்டர் ஆறுமுகம் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் தமிழக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது இவர்களுடன் அமைச்சர் பாண்டியராஜனும் இருந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (27.10.2017) புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
அதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (27.10.2017) புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள 316 உதவி மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 100 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.
இமாச்சல் பிரதேசம் சர்கத்தில் இரண்டு நாள் நடைபெற்ற அகில இந்திய கைபந்து போட்டியில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்ற ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் இன்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சத்திப்பின் போது சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி. கருப்பணன், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என். கிருஷ்ணராஜ் உடன் இருந்தனர்.
அகில இந்திய கைபந்து போட்டியை சம்மர் கேம்ஸ் பெடரேசன் ஆப் இந்தியா நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (27.9.2017) தலைமைச் செயலகத்தில், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 20 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் 17 பயிர்ச்சியளர்கள் ஆகியோருக்கு 90 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை உயரிய ஊக்கத் தொகையாக வழங்கினார்கள்.
இதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில்,
பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாளையொட்டி, தேமுதிக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதுகுறித்து தேமுதிக விஜயகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது;-
தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினோம். pic.twitter.com/v15lG2n8fy
பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாளையொட்டி, சென்னையில் அவரது திருவுருவ சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
அறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவர்கள் மரியாதை செலுத்தினர். இதேபோல் தமிழகம் முழுவதும் அறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.