தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம், தேவதானப்பட்டி கிராமத்தில் உள்ள மஞ்சளாறு அணையிலிருந்து முதல் போக சாகுபடிக்கு வரும் 24.10.2018 வரை தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்!
கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக மதுரையில் அழகர் இறங்கும் விழாவிற்கு மூன்று நாட்கள் வைகை அணையை திறக்க பொதுப்பணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
வைகை அணையில் தெர்மோகோல் மிதக்கவிட்டதால் எனக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர் என்று அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்திருக்கிறார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மோகோல்களை செல்லோடேப் மூலம் ஒட்டி மிதக்க விட்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ. ஆனால் சற்று நேரத்திலே அனைத்து தெர்மோகோல்களும் காற்றில் அடித்து கரைக்கு ஒதுங்கியது.
இதனையடுத்து அமைச்சரும், அவரின் இந்த தெர்மோகோல் திட்டம் சமூக வலைத்தளங்களில் கடுமையான கிண்டலுக்கும் கேலிக்கும் ஆனது. அவரின் தெர்மோகோல் மிதக்கவிடும் திட்டம் விமர்சிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.