போதுமான அளவு மழை இல்லை, 34 அடியாக குறைந்தது வைகை அணை நீர்மட்டம்

போதுமான அளவு மழை பெய்யாததால், வைகை அணையின் நீர்மட்டம் 34 அடியாக குறைந்து விட்டது. 

Last Updated : Jun 28, 2020, 03:36 PM IST
போதுமான அளவு மழை இல்லை, 34 அடியாக குறைந்தது வைகை அணை நீர்மட்டம் title=

மதுரை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக வைகை அணை விளங்குகிறது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யவில்லை. இதனால் நீர்வரத்து அடியோடு நின்று விட்டது.

வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் 34.88 அடியாக குறைந்து விட்டது. இந்த அணை 71 அடி உயரம் கொண்டது. 

இந்தநிலையில் போதுமான அளவு மழை பெய்யாததால், வைகை அணையின் நீர்மட்டம் 34 அடியாக குறைந்து விட்டது. இதனால் மதுரைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. 

 

READ | தமிழரின் வேண்டுகோள் ஏற்று தமிழ்நாடு இல்லத்தின் பெயர் மீண்டும் மாற்றம்!

 

இதறக்கிடையில் வைகை அணைக்கு இக்கட்டான நிலையில் கைகொடுக்கக்கூடிய, முல்லைப்பெரியாறு அணையிலும் போதிய தண்ணீர் இருப்பு இல்லை. இதனால் அங்கிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை. நீர்வரத்தே இல்லாத சூழலில் வைகை அணை நீர்மட்டம் கடந்த சில வாரங்களாக வேகமாக குறைந்து வருகிறது. இதன் எதிரொலியாக, வைகை அணையை மட்டுமே நம்பியுள்ள மதுரை மாநகருக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. 

Trending News