விஜய் சேதுபதி மற்றும் கோகுல் 2வது முறையாக இணைந்திருக்கும் ஜூங்கா படத்தின் படப்பிடிப்பு பாரீஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் விஜய் சேதுபதியின் புதிய கெட்டப் புகைப்படங்கள் வெளிவந்துக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில், பெண் வேடமிட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் விஜய் சேதுபதி கையில் ஒரு துப்பாக்கியுடன் கோட்சூட் அணிந்து வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் தோற்றமளிக்கிறார்.
தனது இயல்பான நடிப்பால் அனைவரயும் கவர்ந்தவர் விஜய் சேதுபதி. இவரை மக்கள் செல்வன் என்று பாசத்துடன் அனைவரும் அழைத்து வருகின்றனர். அதேபோல தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் ஒரே நேரத்தில் மிக அதிகளவில் படம் நடித்து வரும் ஒரே நாயகன் விஜய்சேதுபதி மட்டுமே.
அந்த வகையில் ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்பட கூட்டனியின் அடுத்த படைப்பு ’ஜுங்கா’. இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்புகள் பாரிஸில் படமாக்கப்பட உள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகின.
(நன்றி : EOY Entertainment)
விஜய் சேதுபதி மற்றும் கோகுல் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் ஜங்கா படமத்தின் படப்பிடிப்பு பாரீஸில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் கதைக்கு ஏற்றது போல தனது கெட் அப்பை மாற்றி நடிப்பை வெளிப்படுத்தி வரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் புதிய தோற்றத்தில் ஸ்டைலிஷ் லுக்கில் காட்சியளிக்கிறார்.
பாரீஸில் உள்ள தாதாவாக விஜய் சேதுபதி நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயிஷா ஷைகல் நடிக்கிறார்.
விஜய்சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’.
ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நிஹாரிகா, ரமேஷ் திலக் உடன் நடிக்கின்றனர். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் யூடியூபில் வெளியாகி தற்போது வைராலாகி வருகிறது. அந்த போஸ்டரில் விஜய் சேதுபதி எமன் போன்ற தோற்றத்துடன் கையில் அறுவாளுடன் நிற்கிறார். கெளதம் கார்த்திக் மாடர்ன் இளைஞராக போஸ் கொடுத்திருக்கிறார். மேலும் இப்படத்தின் இசை விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது.
தமிழ் திரைப்பட ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக விளங்கும் "மக்கள் செல்வன்" விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியில் இணைய புதிய திரைப்படம் தயாராகி திரைக்கு வரவுள்ளது. அந்த படத்தின் பெயர் "எடக்கு".
இதில் யாரும் எதிர்பாராத கதாப்பாத்திரத்தில், வித்தியாசமான தோற்றத்தில் விஜய் சேதுபதி மிரட்டியிருக்கிறார். இந்த படத்தை எஸ்.சிவன் இயக்குகிறார். நிமோ ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் கே.பாலு இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க திரைக்கு வரவிற்கிறது "எடக்கு".
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பன்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி உள்ளது.
ஜல்லிக்கட்டை மையபடுத்தி கிராமத்து பின்னணியில் பொழுதுபோக்கு படமாக ‘கருப்பன்’ படம் உருவாக்கி உள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பன்’ படத்தின் ட்ரைலர் இன்று வெளியாக உள்ளது.
ஜல்லிக்கட்டை மையபடுத்தி கிராமத்து பின்னணியில் பொழுதுபோக்கு படமாக ‘கருப்பன்’ படம் உருவாக்கி உள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.