#deletefacebook: வாட்ஸ்அப் இணை நிறுவனரின் சர்ச்சை டிவிட்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற வாடிக்கையாளர்களின் தகவல்களைத் திருடியதாக ஃபேஸ்புக் மீது மோசடிப் புகார்.

Last Updated : Mar 21, 2018, 01:15 PM IST
#deletefacebook: வாட்ஸ்அப் இணை நிறுவனரின் சர்ச்சை டிவிட்! title=

நேற்று முன் தினம் ஒரு தனியார் தொலைக்காட்சியில் "கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம், அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, ஃபேஸ்புக்கில் உள்ள 50 மில்லியன் வாக்காளர்களின் தகவல்களைத் திருடி, டிரம்ப் தேர்தலில் வெற்றிபெற உதவி செய்ததாக செய்தி வெளியிட்டது. இந்த செய்து வெளியானதும் உலக அளவில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பல சிக்கல்கள் உருவாகியுள்ளன.

இந்த செய்திக்குப் பின்னர் நேற்று ஒரே நாளில் மட்டும் அந்நிறுவனத்தின் லாபம் பல மில்லியன் அளவில் குறைந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது, இதுகுறித்து வாட்ஸ்அப் செயலியின் இணை நிறுவனர் பிரையன் ஆக்டன், ஒரு சர்ச்சைக்குரிய பதிவை தனது டிவிட் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில்,

 

 

"It is time. #deletefacebook" என இன்று அவர் டிவிட்டியுள்ளார். சமூக வலைத்தளங்களில் இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News