ஏல நடைமுறைக்கு புதுக்கோணத்தை காட்டியவர்களுக்கு பொருளாதாரத்திற்கான Nobel Prize

2020 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பால் ஆர் மில்கிரோம் (Paul R Milgrom), ராபர்ட் பி வில்சன் (Robert B Wilson) ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு  கூட்டாக வழங்கப்பட்டது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 12, 2020, 08:41 PM IST
  • பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுத்தொகை 10 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர்...
  • மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் பொருளாதாரத் துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படும்...
  • அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயில் அறிவிக்கப்படும்...
ஏல நடைமுறைக்கு புதுக்கோணத்தை காட்டியவர்களுக்கு பொருளாதாரத்திற்கான Nobel Prize title=

2020 பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பால் ஆர் மில்கிரோம் (Paul R Milgrom), ராபர்ட் பி வில்சன் (Robert B Wilson) ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு  கூட்டாக வழங்கப்பட்டது

ஆல்பிரட் நோபலின் நினைவகத்தில், பொருளாதார அறிவியலுக்கான 2020 ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் (Sveriges Riksbank Prize) பரிசு திங்கட் கிழமையன்று அறிவிக்கப்பட்டது.  "ஏலக் கோட்பாட்டின் மேம்பாடுகள் மற்றும் புதிய ஏல வடிவங்களின் கண்டுபிடிப்புகளுக்காக" இருவருக்கும் இந்த பரிசு வழங்கப்பட்டது. 

பரிசுத் தொகை வழக்கமாக ஸ்வீடன் நாணயத்தில் வழங்கப்படும். பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு 10 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (Swedish kronor) பரிசு பெற்றவர்களுக்கு சமமாக பகிர்ந்து வழங்கப்படும்.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் பொருளாதாரத் துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படும். ஆனால், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படுவது வழக்கம்.  

பொருளாதாரப் பிரிவில் இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்ற பால் மில்கிரோம் மற்றும் ராபர்ட் வில்சன் ஆகியோர் ஏல நடைமுறைகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்துள்ளனர். பாரம்பரிய வழியில் விற்க கடினமாக இருக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான புதிய ஏல வடிவங்களை வடிவமைக்க அவர்கள் தங்கள் நுண்ணறிவுகளைப் பயன்படுத்தினர். அவர்களின் கண்டுபிடிப்புகள் உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வாங்குபவர்கள் மற்றும் வரி செலுத்துவோர் பயனடைவார்கள்.

தொடர்புடைய செய்தி | 2020 ஆண்டின் இலக்கியத்திற்கான Nobel பரிசை வென்றார் லூயிஸ் க்ளூக்

மக்கள் எப்போதும் அதிக விலைக்கு விற்பனையாளரிடம் இருந்து பொருட்களை வாங்குவதற்கு விரும்புவதில்லை. சலுகை வழங்கும் விற்பனையாளர்களிடமிருந்து மலிவான விலைக்கு பொருட்களை வாங்குவதில் அனைவருக்கும் விருப்பம் இருப்பது நிதர்சனமான உண்மையாகும். மிகவும் அதிக விலையுள்ள பொருள்கள் ஏலங்களில் விற்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக,  வீட்டு உபயோகப் பொருட்கள், கலை மற்றும் தொன்மையான பொருட்கள் என பல்வேறு வகையிலான பொருட்களும் ஏலத்தில் விற்கப்படுகின்றன.

ஏலக் கோட்பாட்டைப் பயன்படுத்தி, ஏலம் , இறுதி விலைகள், ஏல வடிவத்திற்கான வெவ்வேறு விதிகளின் விளைவுகளை ஆராய்ச்சியாளர்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால் இவற்றை பகுப்பாய்வு செய்வது கடினம். ஏனென்றால் ஏலம் விடுபவர்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் தான் ஏலம் வெற்றிகரமாக நடைபெறும். அதற்கான ஒரு சீரான சூத்திரம் தேவை என்பதற்காக பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.   

Also Read | இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இரவீந்தரநாத் தாகூர்!

“இந்த ஆண்டு பொருளாதார அறிவியலில் பரிசு பெற்றவர்கள் ஒரு அடிப்படைக் கோட்பாட்டுடன் தொடங்கி பின்னர் அவர்களின் முடிவுகளை நடைமுறை பயன்பாடுகளில் பயன்படுத்தினர், அவை உலகளவில் பரவியுள்ளன. அவர்களின் கண்டுபிடிப்புகள் சமுதாயத்திற்கு மிகவும் பயனளிக்கின்றன ”என்று பரிசுக் குழுவின் தலைவர் பீட்டர் ஃப்ரெட்ரிக்சன் கூறுகிறார்.

பால் ஆர் மில்கிரோம் அமெரிக்காவின் டெட்ராய்டில் 1948 இல் பிறந்தார். அமெரிக்காவின் ஸ்டான்போர்டில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் 1979ஆம் ஆண்டில் பி.எச்.டி படித்தார். 

ராபர்ட் பி வில்சன் அமெரிக்காவின் ஜெனீவாவில் 1937 ஆம் ஆண்டில் பிறந்தார். அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் 1963ஆம் ஆண்டில் தனது DBA படிப்பை நிறைவு செய்தார்.

Read Also | அமைதிக்கான நோபல் பரிசு 2016: மானுவல் சாண்டோஸ் தேர்வு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News