‘புயல் நெருங்கிருச்சு ஜாக்கிரத’ - நேரலையில் வீட்டுக்கு போன் செய்த வானிலை ஆய்வாளர்

நேரலை நிகழ்ச்சியின் போது வானிலை ஆய்வாளர் ஒருவர் வீட்டுக்குப் போன் செய்து எச்சரித்துள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Apr 3, 2022, 06:44 PM IST
  • நேரலையில் வானிலை அப்டேட் செய்த நிபுணர்
  • திடீரென வீட்டுக்குப் போன் போட்டு பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்
  • நேரலையில் பதிவான இந்தக் காட்சி இணையத்தில் வைரலானது
‘புயல் நெருங்கிருச்சு ஜாக்கிரத’ - நேரலையில் வீட்டுக்கு போன் செய்த வானிலை ஆய்வாளர் title=

செய்தியாளர் அரங்கில் இருந்து ரிப்போர்ட்டர்களுக்கு போன் செய்யப்பட்டு, கள நிலவரம் குறித்து கேள்வி கேட்பது வழக்கம். அதற்கு செய்தியாளர் அந்த இடத்தில் இருந்தபடியே பதில் சொல்வார். இந்தச் சம்பவத்தை நகைச்சுவையாக கிண்டல் செய்து, செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் ‘சரண்யா’ என்ற பெயருடன் சிறுவன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியது. ஊடக உலகில் அலுவல் ரீதியாக அவ்வப்போது சில விநோதமான கலாட்டா துணுக்குச் செய்திகளும் இணையத்தில் வைரலாகும். அதாவது, செய்திவாசிப்பாளர் இடைவேளை நேரத்தில் தூங்கிவிடுவது மாதிரியும், நேரலை என தெரியாமல் மேக்-அப் செய்வதுமான காட்சிகள் நகைச்சுவைத் தொனியில் உள்ள பல வீடியோக்கள் சமூக வலைதளத்தில் உலவுகின்றன. இதுமாதிரியான விநோத சம்பவம் ஒன்று அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.

மேலும் படிக்க | அமெரிக்காவின் பல மாவட்டங்களை புரட்டிப்போட்ட சூறாவளி: ஏராளமானோர் பலி

பிரபலமான அமெரிக்கா தொலைக்காட்சி ஒன்றில் வானிலை தொடர்பான நேரலை ஓடிக்கொண்டிருந்தது. பார்வையாளர்களுக்கு வானிலை தொடர்பான முக்கியமான தகவல்களை அந்நாட்டு வானிலை ஆய்வாளர் டக் கம்மரெர் பேசிக்கொண்டிருந்தார். புயல் தொடர்பான தகவல்களை மக்களிடம் விலாவாரியாக சொல்லிக்கொண்டிருந்த டக் கம்மரெர், திடீரென நேரலையிலேயே தனது வீட்டுக்கு போன் செய்தார். ‘சூறாவளி நம்ம வீட்டுக்கு பக்கத்துலதான் வந்துட்டு இருக்கு ; வீட்டில் இருக்கும் எல்லோரும் பாதுகாப்பான இடத்துக்கு போய்டுங்க’ என்று சொல்லிவிட்டு போனை துண்டித்துள்ளார். இது அத்தனையும் நேரலையில் பதிவானது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வானிலை ஆய்வாளர் டக் கம்மரெர், ‘ஆம், என் குடும்பத்தை எச்சரிக்க வேண்டியிருந்தது! குழந்தைகள் வீட்டில் தனியாக இருந்தனர், அவர்கள் என்னை டிவியில் பார்க்கவில்லை என்பது எனக்குத் தெரியும்! தற்போது அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். எல்லோருக்கும் நன்றி! எனக்கு இது பயங்கரமான தருணம். நான் கொஞ்சம் நேரலையில் பதற்றமாகிவிட்டேன்’ என்று பதிவிட்டுள்ளார். ஊருக்கே வானிலை அப்டேட் கொடுத்தவர் பின்னே வீட்டுக்குச் சொல்ல மாட்டாரா என்ன.!

மேலும் படிக்க |சென்னையில் எப்போது நிற்கும் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News