BREAKING: பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு.. 34 பேர் பலி, 130 பேர் காயம்,

Pakistan Latest News Today: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 34 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 29, 2023, 02:13 PM IST
BREAKING: பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு.. 34 பேர் பலி, 130 பேர் காயம்,  title=

Pakistan Blast: பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள மசூதி அருகே இன்று (வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 29, 2023) தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 34 பேர் உயிரிழந்தனர் மற்றும் 130 பேர் காயமடைந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈத்-இ-மிலாத்-உன்-நபி பெருநாள் ஊர்வலத்திற்காக மக்கள் கூடியிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாட மக்கள் கூடியிருந்த இடத்தில், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை

பலுசிஸ்தானின் மாகாண நிர்வாகத்தின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்களில் மஸ்துங்கின் டிஎஸ்பி நவாஸ் காஷ்கோரியும் ஒருவர் என்றார். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், தேவைப்பட்டால், அவர்கள் கராச்சி மருத்துவமனைக்கு மாற்றப்படுவார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் முழுப் பொறுப்பையும் அரசு ஏற்கும் என்றார்.

குண்டுவெடிப்புக்கு கண்டனம்

பலுசிஸ்தானின் தகவல் அமைச்சர் ஜான் அச்சக்சாய் கூறுகையில், பலுசிஸ்தானில் உள்ள மத இடங்களை குறிவைத்து நமது எதிரிகள் வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் அமைதியை சீர்குலைக்க விரும்புகின்றனர். இதுபோன்ற தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது. பலுசிஸ்தானில் உள்ள அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பல தலைவர்கள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குண்டுவெடிப்புக்கு யார் பொறுப்பு?
 
இதுவரை குண்டுவெடிப்புக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தான் தலிபான் (TTP) வெளியிட்ட அறிக்கையில் தங்களுக்கும், இந்த குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இல்லை என்று மறுத்ததுள்ளது.

இரண்டாவது பெரிய குண்டுவெடிப்பு

செப்டம்பர் மாதத்தில் மஸ்துங் மாவட்டத்தில் நடந்த இரண்டாவது பெரிய குண்டுவெடிப்பு இதுவாகும். இந்த மாத தொடக்கத்தில், ஒரு குண்டுவெடிப்பில் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் ஃபஸ்ல் (JUI-F) தலைவர் ஹபீஸ் ஹம்துல்லா உட்பட பலர் காயமடைந்தனர்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News