India china border: பிற நாட்டு பிரச்சனையில் அமெரிக்கா ஏன் தலையிட வேண்டும்? கொந்தளிக்கும் சீனா...

China Oppose Indian Support Of America : அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிராந்தியம் என்று ஒப்புக்கொண்டுள்ள அமெரிக்காவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீனா... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 21, 2024, 04:54 PM IST
  • அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவுடையது அல்ல
  • முரண்படும் சீனாவின் கோபம்
  • அமெரிக்காவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீனாவின் உரிமை கோரல்
India china border: பிற நாட்டு பிரச்சனையில் அமெரிக்கா ஏன் தலையிட வேண்டும்? கொந்தளிக்கும் சீனா... title=

அருணாச்சலப் பிரதேசம் தொடர்பாக சீனாவின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமெரிக்கா உறுதிபட தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் எனக் கூறிவரும் சீனா, அருணாச்சலப் பிரதேசத்துக்கு இந்தியத் தலைவர்கள் சென்றால் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதும், அருணாச்சல பிரதேசத்தை ஷங்னன் என்றும் அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கூறுவது போல, அருணாச்சலப் பிரதேசம் என்பது இந்தியாவின் பிராந்தியம் என்று ஒப்புக்கொண்டுள்ள அமெரிக்கா, இந்தியா-சீனா எல்லைக் கட்டுப்பாடு கோட்டைத் தாண்டி நடைபெறும் அத்துமீறல்களை எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது. 

அண்மையில் இந்தியப் பிரதமர் மோடி அருணாச்சலுக்கு சென்றதைத் தொடர்ந்து, அது தனது பகுதி என்று மீண்டும் வலியுறுத்திய சீனாவின் கருத்துகள் சர்வதேச அளவில் பேசுபொருளானது. 

இதுதொடர்பாக புதன்கிழமை (2024 மார்ச் 20) அன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல், “அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் பகுதியாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது. அந்த பிராந்தியத்தை உரிமைகோரும் நடவடிக்கையில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே நடைபெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் ராணுவம் மற்றும் பொதுமக்கள் ஊடுருவுவது போன்ற முன்னெடுப்புகளையும் அமெரிக்க கடுமையாகக் கண்டிக்கிறது" என்று தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | மீண்டும் மீளும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி! அடி சறுக்கும் ரியல் எஸ்டேட் துறையில் மேலும் தளர்ச்சி! 

இதற்கு அடிப்படையான சம்பவம் என்னவென்றால், அருணாச்சலப் பிரதேசத்தின் தாவங் பகுதியில் கட்டப்பட்ட சேலா சுரங்கப் பாதையை திறந்து வைக்க பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சலப் பிரதேசம் சென்றிருந்தார். இந்தியப் பிரதமரின் அருணாச்சல பிரதேச பயணம் குறித்து தூதரக ரீதியில் சீனா எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 

இது தொடர்பாக பேசிய சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் "அருணாச்சலப் பிரதேசம் என்று இந்தியாவால் உரிமை கொண்டாடும் பகுதி இந்தியாவுடையது அல்ல. அது சீனாவின் பகுதி என்பதில் உறுதியாக இருக்கிறோம். இந்தியர்களின் நடவடிக்கை, இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கும். தற்போது சீனா மிகவும் அதிருப்தி அடைந்துள்ளது. இந்தியா - சீனா எல்லைப் பகுதியின் கிழக்கு பகுதிக்கு இந்தியத் தலைவர்களின் வருகையை சீனா எதிர்க்கிறது" என்று தெரிவித்திருந்தார்.

அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கோரும் சீனாவின் உரிமைகோரலை தொடர்ந்து மறுத்து வரும் இந்தியா, அருணாச்சலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று வலியுறுத்தி வருகிறது.  இந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் அறிக்கை இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், சீனாவிற்கு கடுப்பேற்றியுள்ளது. 

கடுப்படைந்த சீனா, அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக அமெரிக்கா அங்கீகரித்ததற்கு இன்று (2024, மார்ச் 21 வியாழக்கிழமை) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனையில் அமெரிக்காவுக்கு என்ன வேலை என்று சீனா கேள்வி எழுப்புகிறது. 

உலகில் பிற நாடுகளுக்கு இடையிலான மோதல்களை தனது புவிசார் அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதாக அமெரிக்கா மீது சீனா குற்றம் சாட்டுகிறது.  அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் பகுதியாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது என்று வேதாந்த் படேல் நேற்று தெரிவித்தக் கருத்துக்களுக்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், சீனா இதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக தெரிவித்தார்.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான எல்லை முழுமையாக வரையறுக்கப்படவில்லை என்றும், 'ஜாங்னான்' (அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா வைத்துள்ள பெயர்) எப்போதும் சீனாவின் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருப்பதாகவும் லின் ஜியான் வலியுறுத்தினார்.சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை இருதரப்பு விவகாரம் என்றும் அதில் அமெரிக்காவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க | உடலுறவு... அதுவும் மாணவியுடன் உணவக கழிவறையில் - பெண் ஆசிரியருக்கு வாழ்நாள் தடை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News