JULY 16: உலக அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம்

உலகளவில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,27 1,35,65,020. உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,84,385, உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 75,70,721

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 16, 2020, 11:49 PM IST
  • உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,27 1,35,65,020
  • உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,84,385
  • உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 75,70,721
JULY 16: உலக அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம் title=

புதுடெல்லி: உலகளவில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,27 1,35,65,020. உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,84,385, உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 75,70,721

COVID-19 நோய்த்தொற்று பரவ தொடங்கியதிலிருந்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் இன்று ஒரே நாளில் 32,696 பேருக்கு கொரோனா பாதித்து, பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்தியாவில் இதுவரை மொத்தமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,68,876 ஆகவும், அதிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6,12,815 ஆகவும், பலி எண்ணிக்கை 24,915 ஆகவும் உயர்ந்துவிட்டது.

தமிழகத்தில்  இன்று 4549 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 1157 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று தமிழகத்தில் 5106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு எண்ணிக்கையை பார்த்தால் 69 ஆக பதிவாகியுள்ளது.

Read Also | COVID-19க்கு சித்த மருத்துவ சிகிச்சை மட்டுமே கொடுக்கும் ஆராய்ச்சி விரைவில் தொடங்கும்

கொரோனாவுக்கான தமிழக அரசின் பிரத்யேக தொலைபேசி உதவி எண்கள்:

1800 120 555550; 044 – 29510400, 044 – 29510500; 044 – 24300300, 044 – 46274446; 9444340496, 8754448477

கொரோனா பெருந்தொற்றை சமாளித்து, உலக நாடுகளில் பொருளாரதார வளர்ச்சியில் முதலிடத்தில் சீனா திகழ்கிறது

டோக்கியோவில் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்ததால் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் தீவுகளில் ஒன்றான மஜோர்காவில் இரண்டு சுற்றுலாப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகள், இரவு விடுதிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:

1. அமெரிக்கா - 34,97,847

2. பிரேசில் - 19,66,748

3. இந்தியா - 9,68,857

4. ரஷ்யா - 7,45,197

5. பெரு - 3,37,751

Read Also | வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறியா?

6. சிலி - 3,21,205

7. மெக்சிகோ - 3,17,635

8. தென்னாப்பிரிக்கா - 3,11,049

9. இங்கிலாந்து - 2,93,469

10. இரான் - 2,64,561

Trending News