காதலியைக் கொன்று சடலத்தை புதைக்கும் போது இறந்த காதலன்

அமெரிக்காவில் காதலியை கொன்ற ஒருவர் காதலியின் உடலை புதைக்கும் போது உயிரிழந்த விசித்திர சமப்வம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 18, 2022, 11:01 AM IST
காதலியைக் கொன்று சடலத்தை புதைக்கும் போது இறந்த  காதலன் title=

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில், காதலியை கொன்ற ஒருவர் இறந்த விசித்திர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.  காதலியை கொன்று புதைக்கும் செய்யும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போன சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலியின் கழுத்தை நெரித்து கொலை

இந்த விசித்திர சம்பவம் அமெரிக்காவில் நடந்ததாக, 'நியூயார்க் போஸ்ட்' நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. தென் கரோலினாவைச் சேர்ந்த ஜோசப் மெக்கின்னன் என்ற 60 வயது என்பவர் தனது 65 வயது காதலியான பாட்ரிசியா டென்ட்டை கழுத்தை நெரித்து கொன்றார்.  குறிப்பிட்ட இந்த நபர் தனது காதலியின் வீட்டில் வைத்தே இந்த படுகொலை சம்பவத்தை நடத்தியுள்ளார்.

புதைத்த இடத்தில் மரணித்த சம்பவம் 

எட்ஜ்ஃபீல்ட் கவுண்டி ஷெரிப் அதிகாரி கூறுகையில், குறிப்பிட்ட இந்த நபர் மயக்கமடைந்து கிடப்பதாக உள்ளூர் மக்கள் அவருக்குத் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அந்த நபரின் உடலை மீட்டனர். அப்போது, அவர்கள் அருகில் உள்ள ஒரு குழியில் மற்றொரு உடலைக் கண்டனர். அந்த உடல் அந்த நபரின் காதலி பாட்ரிசியா டென்ட் என அடையாளம் காணப்பட்டது. இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 100க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் ; கைதேர்ந்த கொள்ளையனின் பகீர் பின்னணி..!

சடலத்தை புதைக்கும் போது மாரடைப்பு 

இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனை செய்தபோது, ​​பெட்ரிசியா டென்ட் கழுத்தை நெரித்து இறந்தது தெரியவந்தது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில், மெக்கின்னன் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த நபர் தனது காதலியை அடக்கம் செய்ய முயன்ற போது உயிரிழந்துள்ளார். அந்த நபர் தனது காதலியை ஒரு பையில் போட்டு குழிக்குள் போட்டு புதைக்க சென்று கொண்டிருந்ததாக விசாரனையை மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | தகாத உறவை கைவிட சொன்ன இரண்டாவது காதலனை அடித்து கொலை செய்த பெண்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியுஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News