ராணுவத்தை விமர்சிப்பியா? உன்னோட குடியுரிமை கேன்சல்! விளாடிமிர் புடின் அதிரடி

Russian Ctizenship Revoke: இனி, ராணுவத்தை விமர்சிப்பவர்களின்  குடியுரிமை ரத்து செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்மொழிந்துள்ளார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 14, 2022, 04:11 PM IST
  • ரஷ்ய ராணுவத்தை விமர்ச்சிப்பவர்களை கடுமையாக தண்டிக்கும் ரஷ்யா
  • ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் ரஷ்யா
  • இணைக்கப்பட்ட பிராந்தியங்களின் குடியுரிமை சட்டத்திருத்தம்
ராணுவத்தை விமர்சிப்பியா? உன்னோட குடியுரிமை கேன்சல்! விளாடிமிர் புடின் அதிரடி title=

மாஸ்கோ:  ரஷ்ய ராணுவத்தை விமர்சிப்பவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்மொழிந்துள்ளார். முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் ஸ்டேட் டுமாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மசோதாவின் திருத்தங்களின்படி, 'ரஷ்ய ஆயுதப் படைகளைப் பற்றிய தவறான தகவல்களை வேண்டுமென்றே பகிரங்கமாகப் பரப்புவது' ஒரு குற்றம் ஆகும். இந்த குற்றம் செய்யப்பட்டவர்களின் ரஷ்ய பாஸ்போர்ட்டை ரத்து செய்வதற்கு இதுவே போதுமான காரணமாக இருக்கும்.அதாவது, ஒருவரின் குடியுரிமை பறிக்கப்படும் என்பது இதன் பொருள்.  

ரஷ்ய இராணுவம் தொடர்பான விஷயங்களை தவறாக சித்தரிப்பது, விமர்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளின் குடியுரிமையை ரத்து செய்ய அனுமதிக்கும் சட்டத்தில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு திருத்தத்தை முன்மொழிந்துள்ளார் என்று, ரஷ்ய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் படிக்க | மிக மலிவான விலையில் ஸ்பெயின் கிராமம்; விலையை கேட்டால் வியப்பில் மயக்கம் வரும்!

இந்த சட்டத் திருத்தம், பாஸ்போர்ட் மூலம் குடியுரிமை பெற்றவர்களை குறிவைக்கிறது என்பதும், பிறப்புரிமை மூலம் அல்ல என்பது முக்கியமான விஷயம் ஆகும். அதாவது ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட புதிய பிரதேசங்களை சேர்ந்தவர்களின் ரஷ்ய குடியுரிமை ரத்து செய்யப்படும். பிறப்பால் ரஷ்யர்களாக இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுதல், தீவிரவாதத்திற்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்தல், அரசாங்க அதிகாரியின் உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் அரச சின்னம் மற்றும் கொடியை துஷ்பிரயோகம் செய்தல் ஆகியவையும் புடின் முன்மொழிந்துள்ள மாற்றங்களில் அடங்கும்.

"அரசுக்கு எதிரான கடுமையான குற்றங்கள், பயங்கரவாத நடவடிக்கைகள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் போலி ஆவணங்கள்" ஆகியவற்றிற்காக குடியுரிமை ரத்து செய்யப்படும் என்று அசல் மசோதா பரிந்துரைத்திருந்தது.

வெளிநாட்டு அல்லது அரசு சாரா சர்வதேச நிறுவனங்களின் கீழ் பணிபுரிபவர்கள், "ரஷ்யாவின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு பாதகமானதாக" கருதப்படும் நடவடிக்கைகளை மேற்கொண்டால்,அ அவர்களை தண்டிக்க இந்த திருத்தங்கள் முயல்கின்றன.

மேலும் படிக்க | 9ஆவது குழந்தை வரப்போகுது... அதனால் இன்னொரு பொண்ணு வேணும் - அடம்பிடிக்கும் பிரபலம்

"குடியுரிமையை பறிக்க வழிவகுக்கும் மாநிலத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான நடவடிக்கைகளின் வழக்குகளை நிறுவுவதற்கான நோடல் ஏஜென்சியாக ரஷ்யாவின் பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (FSB) இருக்கும்" என்பதும் புதிய த்சட்ட திருத்த முன்மொழிவில் அடங்கும்.

குற்றம் எப்போது நடந்தாலும் குடியுரிமையை திரும்பப் பெறுவதற்கான முடிவை எடுக்கலாம் என்றும் இந்த சட்டத் திருத்தங்களில் கூறப்பட்டுள்ளது. ரஷ்ய அரசு மற்றும் அந்நாட்டு அதிபர் புடினின் இந்த முடிவின் பின்னணி என்ன?

உக்ரேனுடான, ரஷ்ய போர் தொடங்கியதில் இருந்தே, ரஷ்ய இராணுவத்தின் நடவடிக்கைகளை, உள்ளூர் ஊடகங்கள் எவ்வாறு வெளிப்படுத்துகின்றான என்பதை கையாள்வது தொடர்பாக ரஷ்யா தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.

யுத்தம் தொடர்பான உள்ளூர் ஊடக அறிக்கைகளை பாதகமானதாக கருதி, ஊடகங்களுக்கு எதிராக ரஷ்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு, ரஷ்ய இராணுவத்தைப் பற்றி வேண்டுமென்றே "போலி" செய்திகளைப் பரப்பியதற்காக 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தை, ரஷ்ய பாராளுமன்றம் நிறைவேற்றியது.

மேலும் படிக்க | திகில் அனுபவத்தை கொடுக்கும் இங்கிலாந்து சிறை! கேள்விபட்டிருக்கிறீர்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News