Cat Bite : பூனை கடித்தால் வந்த ஆபத்து... கதரும் குடும்பம் - கவனமா இருங்க!

வளர்ப்பு பூனை கடித்ததை அலட்சியப்படுத்திய ஒருவர், நான்கு ஆண்டுகளுக்கு பின் உடல்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Dec 15, 2022, 03:35 PM IST
  • பூனை கடித்ததை அலட்சியப்படுத்த வேண்டாம் என உயிரிழந்தவரின் குடும்பம் வேண்டுகோள்.
  • பூனைகளின் பல்லில் பாக்டீரியாக்கள் இருக்க அதிக வாய்ப்பிருக்கும்.
Cat Bite : பூனை கடித்தால் வந்த ஆபத்து... கதரும் குடும்பம் - கவனமா இருங்க! title=

தற்போதெல்லாம் டேட்டிங் போவதற்கு ஒரு ஆண் பெண்ணிடமோ, ஒரு பெண் ஆணிடமோ கேட்கும் கேள்விகளில் ஒன்று, உங்களுக்கு நாய் பிடிக்குமா அல்லது பூனை பிடிக்குமா (Are u a cat person or Dog person?) என்பதாகவே இருக்கும். செல்லப்பிராணிகள் வளர்ப்பில், முன்பு நாய்களே அதிகம் ஆதிகம் செலுத்திவந்த நிலையில், தற்போது பூனையும் அதிகமாகிவிட்டது. 

பூனைகளை கொஞ்சுவதும், அதன் சேட்டைகளை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றுவது என பூனை மீதான ஈர்ப்பு அதிகமாகியுள்ளது. ஆனால், இங்கு ஒரு வளர்ப்பு பூனை கடித்ததில் நான்கு ஆண்டுகள் கழித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம், பூனை வளர்ப்போர் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

டென்மார்க்கை சேர்ந்த ஹென்ரிக் க்ரீக்பாம் பிளெட்னர் என்பவர் 2018ஆம் ஆண்டில், ஒரு பெண் பூனையையும் அதன் குட்டிகளையும் தத்தெடுத்து வீட்டில் வளர்த்து வந்துள்ளார். அப்போது, 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அதில் ஒரு பூனை ஹென்ரிக்கின் ஆட்காட்டி விரலை கடித்துள்ளது. 

நான்காண்டுகளுக்கு பின்...

முதலில், விரலில் ஏற்பட்ட காயத்தை அலட்சியப்படுத்திய ஹென்ரிக், அவரது கை வழக்கத்தை விட இரண்டு மடங்கு வீக்கம் கண்ட பிறகே அதன் தீவிரத்தை உணர்ந்துள்ளார். தொடர்ந்து, மருத்துவரை ஆலோசித்து பரிசோதனை மேற்கொண்டார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹென்ரிக், பல மாதங்களாக அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது, அவருக்கு 15 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க | விந்தணுவை ஊசி மூலம் செலுத்திக் கொண்டு கர்ப்பம் அடைந்த சிறுமி! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

அத்தனை அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி நான்கு மாதங்களுக்கு பின்னும், அவரின் விரல் சரியாகவில்லை. இதனால் வேறு வழியில்லாமல், தன் மற்ற விரல்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அந்த விரலை மருத்துவர்களின் உதவியுடன் துண்டித்தார்.

ஆனால், அந்த பூனையின் கடி அவரது ரத்த நாளங்களை பாதித்ததால் அவரது உடல்நிலை மோசமாகியுள்ளது.
பூனை கடித்ததால் ஏற்பட்ட புண் விரைவாகவே குணமாகிவிட்ட நிலையில், அவரின் உடலினுள் புகுந்த கொடிய பாக்டீரீயாக்கள் உடல் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது. எனவேதான், அவரது உடல்நிலை இன்னும் மோசமடைந்துள்ளது. 

நீண்ட காலமாக தொடர்ந்து மருத்துவச் சிகிச்சையில் இருந்த வந்த அவர், இந்தாண்டு அக்டோபர் மாதம் காலமானார். ஏறத்தாழ பூனை கடித்து, நான்காண்டுகளுக்கு அவர் உயிரிழந்தார். பூனை கடிப்பதை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும் என ஹென்ரிக்கின் குடும்பம் பலரை அறிவுறுத்தி வருகிறது. 
 
பூனை கடித்தால் ஆபத்தானதா?

பூனைகள் தங்கள் வாயில் பல வகையான பாக்டீரியாக்களை கொண்டிருக்கும். பூனை கடிப்பதால் ஏற்படும் காயங்கள் மூலம் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. வளர்ப்புப் பூனைகளுக்கு ரேபிஸ் போன்ற நோய்களுக்கு எதிராக அடிக்கடி தடுப்பூசி போட்டாலும், வெளியில் திரியும் பூனைகள் தடுப்பூசிகள் போடப்படுவதில்லை. எனவே, அவைகள் நோய் பரப்பும் ஆபாயம் கொண்டவை என மருத்துவம் சார்ந்த ஆங்கில பத்திரிகை ஒன்று தெரிவிக்கிறது. 

"ஒரு பூனையின் வாயில் டன் கணக்கில் ஆபத்தான பாக்டீரியாக்கள் செழித்து வளர்கின்றன. பூனைகளின் பற்கள் கூர்மையாகவும், ஊசியாகவும் இருக்கும். அவை உங்களைக் கடிக்கும்போது, ​​அவை பாக்டீரியாவை உங்கள் சருமத்தின் திசுக்களில் ஆழமாக செலுத்துகின்றன. உங்கள் தோலுக்கு அடியில் எளிதில் பாக்டீரியாவை செலுத்திவிடும்," என அந்த பத்திரிகை விவரிக்கிறது. 

Cat scratch disease (CSD) பார்டோனெல்லா ஹென்செலே என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. தொற்றுநோயைச் இருக்கும் பூனை நக்கும்போது, கடித்தால் அல்லது கீறல்கள் ஏற்படுத்தும்போது இது பரவுகிறது.

மேலும் படிக்க | நெருக்கடியில் பாகிஸ்தான்... அமெரிக்காவில் உள்ள தூதரக கட்டிடத்தை விற்க முயற்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News