அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப் (Melania Trump) அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தால், அவருக்கு ஜீவனாம்சமாக 68 மில்லியன் டாலர் கிடைக்கக்கூடும் என சட்ட நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மெலனியாவும் டிரம்பும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பரோன் டிரம்ப் என்ற மகன் இருக்கிறார். இருப்பினும், ட்ரம்புடனான தனது திருமணத்தை முடித்துக்கொள்ள மெலனியா இப்போது திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் வலுவாக உள்ளன.
"டிரம்பின் ஆட்சிக்காலம் எப்போது முடியும், எப்போது அவரை விவாகரத்து செய்யலாம் என மெலனியா ஒவ்வொரு நிமிடமும் எண்ணிக் கொண்டிருக்கிறார்" என்று வெள்ளை மாளிகையின் (White House) முன்னாள் உதவியாளர் ஓமரோசா மணிகோல்ட் நியூமன் கூறினார்.
"டிரம்ப் பதவியில் இருக்கும்போதே விவாகரத்து செய்ய மெலனியா துணிந்தால், அவரை தண்டிக்க டிரம்ப் ஒரு வழியைக் கண்டுபிடிப்பார்" என்று அவர் மேலும் கூறினார்.
ட்ரம்பிடமிருந்து மெலனியா பிரிந்தால், அவர் 50 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான ஒரு தீர்வைப்பெறக் கூடும் என்று பெர்க்மேன் பாட்ஜர் நியூமன் & ரோட் நிர்வாக பங்குதாரர் ஜாக்குலின் நியூமன் டவுன் மற்றும் கன்ட்ரிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
2018 ஆம் ஆண்டில், மெலனியாவுக்கும் டொனால்ட் டிரம்பிற்கும் (Donald Trump) இடையிலான தீர்வு 14 வயது பரோனைப் பொறுத்தது என்று நியூமன் கூறியிருந்தார்.
“நான் செய்தித்தாள்களில் படித்ததைப் பொறுத்தவரை, முதன்மை பராமரிப்பாளர் யார் என்பது குறித்து அதிக கேள்வி எழுப்பப்படுவதாகத் தெரியவில்லை. என் யூகம் என்னவென்றால், மெலனியாவுக்கு முதன்மைக் காவல் உரிமைகள் கிடைக்கும். டிரம்ப் நகரத்தில் இருக்கும்போதெல்லாம் மகனைப் பார்க்கலாம் என்ற அனுமதியைப் பெறலாம்” என்று நியூமன் கூறினார்.
ALSO READ: Donald Trump: அரசியல் தோல்வியை தொடர்ந்து குடும்ப வாழ்க்கையிலும் தோல்வியா..!!!!
விவாகரத்து ஆனால், மெலனியாவுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்று நியூமன் கூறினார்.
“இது நிச்சயமாக பெரிய தொகைதான் என்றாலும், அவர் இப்போது அனுபவிக்கும் பழகிய வசதிகளை பின்னர் பெற முடியாது. விவாகரத்து ஆனால், அதற்கான நல்ல தொகையை மெலனியாவுக்கு டிரம்ப் அளிப்பார் என தோன்றுகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
ட்ரம்பின் முந்தைய இரண்டு திருமணங்களில், திருமணத்திற்கு முன்கூட்டிய ஒப்பந்தங்களின்படி பண தீர்வுகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்பின் இரண்டாவது மனைவி, மார்லா மேப்பிள்ஸுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் கிடைத்ததாக கூறப்படுகிறது. அவரது முதல் மனைவி இவானா டிரம்பிற்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர், கனெக்டிகட்டில் ஒரு மாளிகை, ஒரு நியூயார்க் அபார்ட்மெண்ட் மற்றும் ஆண்டுக்கு ஒரு முறை மார்-எ-லாகோவிற்கு அணுகல் ஆகியவை வழங்கப்பட்டன.
தி ஆர்ட் ஆஃப் ஹெர் டீல்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் மெலனியா டிரம்பின் ஆசிரியர் மேரி ஜோர்டானின் கூற்றுப்படி, ட்ரம்பின் மற்ற குழந்தைகளைப் போலவே பரோனுக்கும் அனைத்து நன்மைகளும் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மெலனியா எடுத்துள்ளார்.
ALSO READ: சீனாவை ஒரு கை பார்க்காமல் டொனால்ட் டிரம்ப் கிளம்ப மாட்டார்: அரசியல் நிபுணர்கள்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR