ஒரு நாளைக்கு 10 லிட்டர் தண்ணீர் குடிக்கும் நபர்! மருத்துவ பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் உண்மை!

Viral News in Tamil: ஒருநாளைக்கு 10 லிட்டர் தண்ணீர் குடிக்கும் மனிதன். வித்தியாசமான நோய்யால் அவதிப்பட்ட நபர். அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்ன நடந்தது? முழு விவரம் இதோ..

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 20, 2023, 06:51 PM IST
  • ஒரு நபர் ஒரு நாளைக்கு 10 லிட்டர் தண்ணீர் குடிக்க முடியுமா? அப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
  • அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
  • 30 முறை கதிரியக்க சிகிச்சை. நீண்ட சிகிச்சைக்கு பின் நலமாக இருக்கிறார்.
ஒரு நாளைக்கு 10 லிட்டர் தண்ணீர் குடிக்கும் நபர்! மருத்துவ பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் உண்மை! title=

Trending News In Tamil: எந்தவொரு மனிதனுக்கும் அல்லது உயிரினத்திற்கும் தண்ணீர் மிகவும் முக்கியமானது. மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் ஒரு நபர் ஒரு நாளைக்கு 10 லிட்டர் தண்ணீர் குடிக்க முடியுமா? இது சாதாரண விசியம் இல்லை. ஆனால் அப்படி ஒரு சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது. அந்த நபர் கடுமையான தாகத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார். அதாவது அங்கு வசிக்கும் ஜொனாதன் என்ற நபர் தினமும் 10 லிட்டர் தண்ணீர் குடிப்பதாக டாக்டரிடம் கூறியுள்ளார். அதைக்கேட்ட ​​டாக்டர் மிகவும் ஆச்சரியப்பட்டுள்ளார். 

மருத்துவர்களுக்கு அதிர்ச்சி..
மருத்துவரிடம் சென்ற ஜொனாதன், தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை கூறியபோது, இவருக்கு ஒருவேளை சர்க்கரை நோய் இருக்கலாம், அதன் காரணமாக அவருக்கு தாகம் அதிகம் ஏற்படுகிறது என மருத்துவர்கள் நினைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் 41 வயதான ஜொனாதனுக்கு நீரிழிவு நோய் இல்லை என்று பரிசோதனையில் கண்டறியப்பட்டதும் மருத்துவர்கள் கவலையடைந்தனர்.

அதன் பிறகு கண் பரிசோதனைக்காக மருத்துவரிடம் ஜொனாதன் சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அவரின் கண்ணில் கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். அதன்பிறகு அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. அவரின் பிட்யூட்டரி சுரப்பிக்கு அருகில் மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் படிக்க - அழகுக்கு பின் ஆபத்து இருக்கும்! ஏமாந்திடாதீங்க!

தினமும் ஐந்து மடங்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என சிக்னல்..
இது மூளையின் ஒரு பட்டாணி அளவிலான பகுதி, இது நமது தாகத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து, தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால் அவரின் உடலில் மூளைக்கட்டி ஏற்பட்டதால், அதன் அமைப்பு பாதிக்கப்பட்டு, தினமும் ஐந்து மடங்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அவருக்கு சிக்னல் கொடுக்கப்படுவதால், இதன் காரணமாக அவருக்கு தாகம் அதிகமாக ஏற்படுகிறது எனத் தெரியவந்தது.

நான் மனதளவில் உடைந்து போனேன்..
இதுக்குறித்து ஜொனாதன் கூறுகையில், கட்டி குறித்து மருத்துவர்கள் கூறியவுடன், நான் அதிர்ச்சியடைந்தேன். நான் மனதளவில் உடைந்து போனேன். அதன் பிறகு சிகிச்சை ஆரம்பித்து 30 முறை கதிரியக்க சிகிச்சை செய்யப்பட்டது. நீண்ட சிகிச்சைக்கு பின் இன்று நான் கட்டி இல்லாமல் நலமாக இருக்கிறேன். முன்பு என்னால் இயல்பாக ஓட முடியவில்லை. ஆனால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யத் தொடங்கினேன், எனது எடையில் கட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் என் கண்ணில் கட்டி ஏற்பட்டதால் அது என் வாழ்க்கையை மாற்றியது எனக் கூறினார்.

மேலும் படிக்க - Viral Video: இது என்ன மாயம்? இப்படிக்கூட நடக்குமா? “திடீரென தங்கமாக மாறிய ஆறு”

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News