கேக் வெட்டும் பொழுது தலையில் தீ பற்றியதால் பரபரப்பு! வைரலாகும் வீடியோ!

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பொழுது கேக்கில் உள்ள மெழுகுவர்த்தியை அணைக்க முயன்றதில் பெண்ணின் தலைமுடியில் நெருப்பு பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.  

Written by - ZEE Bureau | Last Updated : Dec 8, 2021, 06:37 PM IST
கேக் வெட்டும் பொழுது தலையில் தீ பற்றியதால் பரபரப்பு! வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவை சேர்ந்த அனா ஒஸ்டெர்ஹவுஸ்(34) என்ற பெண், தனது 7 வயது மகன் ஹண்டருடன் குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாட முடிவு செய்து அதன்படி அதற்கேற்றவாறு அனைவரையும் அழைத்திருந்தார். அதனையடுத்து அலங்காரம் செய்யப்பட்ட அந்த அறையில் அனைவரது முன்னிலையிலும் பிறந்தநாள் கேக்கில் நிறைய மெழுகுவர்த்தியை ஏற்றினார்.  அங்கு குழுமியிருந்த அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாட தொடங்கியதும் உற்சாகத்தில் அனாவும் பாடலை பாடிக்கொண்டே கேக்கில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியை அணைக்க முற்பட்டார்.

ALSO | விமானத்தில் பூனைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்ணால் பரபரப்பு!

அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக, எரிந்துகொண்டிருந்த மெழுகுவர்த்தி அவரது தலைமுடியில் பட்டு மளமளவென்று தீ எரிய ஆரமித்தது, அதனையடுத்து அங்கிருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு அனாவை பெரிய விபத்தில் சிக்காதவாறு காப்பாற்றினர்.  இருப்பினும் அவருக்கு கண் இமை முடியும், தலைமுடியும் பொசுங்கியது, மேலும் முகத்தில் சிறிதளவில் தீக்காயம் ஏற்பட்டது.

 

இந்த சம்பவம் குறித்து அனா கூறுகையில், " அந்த நொடி என் வாழ்க்கை முடிய போவது என் கண் முன்னால் தெரிந்தது.  இது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு அனுபவம், அந்த நேரம் என்ன நடந்தது என்றே என்னால் யூகிக்க முடியவில்லை.  அதே சமயம் மற்றவர்களுக்கு என்னால் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும் வேண்டினேன்.  மேலும் துரிதமாக செயல்பட்டு என்னை காப்பற்றிய என் குடும்பத்திற்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்" என்று கூறினார்.  இவர் முடியில் நெருப்பு பற்றிய புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாகி வருகிறது.

ALSO READ | வலி இல்லாமல் தற்கொலை செய்ய மெஷின்; சுவிட்சர்லாந்து அரசு அனுமதி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News