கினியாவில் ஆட்சி கலைப்பு - ராணுவம் அறிவிப்பு

 மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிடமிருந்து 1958-ம் ஆண்டு விடுதலை பெற்றது. அந்நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு ஜனநாயக முறைபப்படி நடைபெற்ற முதல் தேர்தலில் ஆல்பா காண்டே என்பவர் வெற்றி பெற்று அதிபரானாா்.  தொடா்ந்து அதிபராக இருந்து வந்த அவா், 3-வது முறையாக கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அதிபராகத் தொடா்ந்தாா். ஆனால் அவருக்கு எதிா்ப்பு வலுத்து வந்தது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 6, 2021, 04:04 PM IST
கினியாவில் ஆட்சி கலைப்பு - ராணுவம் அறிவிப்பு title=

கோனாக்ரி:  மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிடமிருந்து 1958-ம் ஆண்டு விடுதலை பெற்றது. அந்நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு ஜனநாயக முறைபப்படி நடைபெற்ற முதல் தேர்தலில் ஆல்பா காண்டே என்பவர் வெற்றி பெற்று அதிபரானாா்.  தொடா்ந்து அதிபராக இருந்து வந்த அவா், 3-வது முறையாக கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அதிபராகத் தொடா்ந்தாா். ஆனால் அவருக்கு எதிா்ப்பு வலுத்து வந்தது.  

கினியாவின் அதிபர் ஆல்பா காண்டே பதவியேற்ற பின்னர், கினியா நாட்டில் இருந்து அலுமினியத்தின் தாது பொருட்களை ஏற்றுமதி செய்யும் பணிகள் மிக வேகமாக வளர்ச்சியடைந்தன. ஆனால் இந்த ஏற்றுமதியால் கினியா மக்கள் பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், நேற்று அதிகாலை தலைநகா் கோனாக்ரியில் உள்ள அதிபா் மாளிகை அருகே கடுமையான துப்பாக்கிச்சூடு சத்தம் பல மணி நேரம் தொடா்ந்து கேட்டது. இதையடுத்து, அரசுத் தொலைக்காட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ராணுவ கா்னல் மமாடி டம்போயா, அதிபா் ஆல்பா காண்டே தலைமையிலான அரசு கலைக்கப்பட்டதாக அறிவித்தாா்.

kniay

அரசாங்கத்தை ஒரு தனி நபரிடம் ஒப்படைக்க இனியும் தாங்கள் விரும்பவில்லை. அரசாங்கத்தை இனி மக்களே வழிநடத்துவார்கள். நாட்டைக் காப்பற்ற வேண்டியது ஒவ்வொரு ராணுவ வீரனின் கடமை என அவர் குறிப்பிட்டார். இருப்பினும், அதிபரின் நிலை என்ன..??என்பது பற்றி அவா் எதுவும் தெரிவிக்கவில்லை.  கினியா ராணுவத்தின் இந்த செயல்பாடு குறித்து கண்டனம் தெரிவித்துள்ள ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ், “துப்பாக்கியின் பலத்தால் அரசாங்கத்தைக் கைப்பற்றுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, ராணுவத்தின் ஒரு பிரிவினரின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக கினியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அதிபரின் நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சகமும் இதுவரையில் எந்த தகவலும் தெரிவிக்காத நிலையில், அங்கு குழப்பம் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ கசிந்தது திட்டம்! அதிர்ந்தது அரசக்குடும்பம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News