இஸ்ரேலுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவது எப்படி? ஹிஸ்புல்லா ஹமாஸ் தலைவர்கள் சந்திப்பு

Israel Hamas War: இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு இடையே ஹிஸ்புல்லா, ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்களுக்கு இடையே சந்திப்பு நடந்தது. இச்சந்திப்பில், இஸ்ரேலுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 25, 2023, 04:27 PM IST
  • ஹிஸ்புல்லா, ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்களுக்கு இடையே சந்திப்பு.
  • இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரில் 40 ஹிஸ்புல்லா போராளிகள் மரணம்.
  • இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் 2500 குழந்தைகள் உர்ப்ட 5,791 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு.
இஸ்ரேலுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவது எப்படி? ஹிஸ்புல்லா ஹமாஸ் தலைவர்கள் சந்திப்பு title=

Hezbollah Hamas Islamic Jihad Meet: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போர் 19வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதற்கிடையில் ராய்ட்டர்ஸ் ஊடகம் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில், இஸ்ரேலுடன் நடந்து வரும் போருக்கு மத்தியில் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்களை ஹிஸ்புல்லா தலைவர் சந்தித்துள்ளனர். லெபனானின் ஹிஸ்புல்லா தலைவர்கள், பாலஸ்தீனிய குழுக்களான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் ஆகியவற்றின் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து போரின் நிலைமை குறித்து விவாதித்ததாக ஹிஸ்புல்லா இன்று (அக்டோபர் 25, புதன்கிழமை) தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவது எப்படி? ஆலோசனை

இந்த சந்திப்பின் போது, ​​இஸ்ரேலுக்கு எதிராக நடந்து வரும் போரில் வெற்றி பெறுவது குறித்து ஹிஸ்புல்லா, ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்களுக்கு இடையே கலந்துரையாடப்பட்டது. அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடங்கியதில் இருந்து ஹிஸ்புல்லா இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - ஹிஸ்புல்லா என்றால் என்ன? இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கும் என்ன சம்பந்தம்? தெரிந்து கொள்ள வேண்டியவை

ஹிஸ்புல்லா - ஹமாஸ் தலைவர்கள் சந்தித்துக் கொண்டனர்.

இந்த சந்திப்பில் ஹிஸ்புல்லாஹ் தலைவர் சயீத் ஹசன் நஸ்ரல்லா, ஹமாஸ் துணைத்தலைவர் சலே அல் அரூரி மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் தலைவர் ஜியாத் அல் நக்லா ஆகியோர் கலந்து கொண்டதாக ஹிஸ்புல்லாஹ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும், இந்த தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு எப்போது நடந்தது என்பதை குறித்து ஹிஸ்புல்லா தரப்பு தெரிவிக்கபடவில்லை.

இஸ்ரேல் தாக்குதல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை

இச்சந்திப்பில் சர்வதேச மட்டத்தில் யுத்த நிலவரங்களை குறித்து மதிப்பீடு செய்ததாகவும், போரில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக ஹிஸ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதுவரை 40 ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்

இஸ்ரேலுடனான போரில் மேலும் இரண்டு போராளிகள் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லா புதன்கிழமை உறுதிப்படுத்தியது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடங்கியதில் இருந்து 40 ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டு உள்ளனர். 

மேலும் படிக்க - இஸ்ரேல் ஹமாஸ் போர்: காசா மீது கடும் குண்டுவீச்சு.. 24 மணி நேரத்தில் 400 பாலஸ்தீனியர்கள் பலி

11 சிரியா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்

சிரியாவின் இராணுவ தளம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 வீரர்கள் கொல்லப்பட்டனர் என சிரியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஒரு நாளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள்

திங்கள் மற்றும் செவ்வாய் என இரண்டு நாட்க்களில் மட்டும் காசாவில் 47 வான்வழித் தாக்குதல்கள் நடந்ததாக காசாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள்காட்டி 'நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. இதில் 704 பேர் பலியாகினர். இந்த எண்ணிக்கை என்பது இருதரப்புக்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிகமான மக்கள் கொல்லப்பட்டது இதுவே ஆகும் எனக் கூறியுள்ளது. அதேநேரத்தில் ஒரே நாளில் 400 இலக்குகளைத் தாக்கியதை இஸ்ரேலே ஒப்புக்கொண்டது.

இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் இறந்தவர்களின் நிலவரம்

இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் இதுவரை 5,791 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளதாகவும், அதில் 2500 குழந்தைகள் அடங்குவார்கள் எனவும், 14245 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக பாலஸ்தீனம் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மறுபுறம் 366 துருப்புகள் உட்பட 1405 இஸ்ரேலியர்கள் உயிரிழந்து உள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க - Israel Palestine War: அமெரிக்க பணயக்கைதிகளை விடுவித்த ஹமாஸ்.. நன்றி கூறிய அமெரிக்க அதிபர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News