டோக்கியோ: ஜப்பானின் யமடோ நகரில், நடந்து செல்லும்போது மொபைல் பயன்படுத்த தடை
நடந்து செல்லும்போது மொபைல் போன்களை பயன்படுத்துவதால், விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்த பிறகு விபத்துகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இனி Yamato cityயில் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்படும்.
இதற்கான முன்மொழிவு ஏற்கப்பட்டு தற்போது சட்டம் அமல்படுத்தப்படுகிறது. வீதிகளில் நடந்து செல்லும்போது போனில் பேசிக் கொண்டிருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் நடத்தப் போவதாக நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.
Also Read | கொரோனா: 100 வயதான மூதாட்டியின் உற்சாகம் கொடுக்கும் உத்வேகமும் நம்பிக்கையும்
நடைபயிற்சியின் போது மக்கள் பெரும்பாலும் மொபைல் போன்களைப் பயன்படுத்தும் காட்சிகளை ஏறக்குறைய எல்லா நகரங்களிலும் காணமுடியும். ஆனால் ஜப்பானின் யமடோ நகரில் மட்டும் இனிமேல் அத்தகைய காட்சிகளை காணமுடியாது.
பயணத்தின்போது ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நகர அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த கட்டுப்பாடு அடுத்த மாதம் நடைமுறைக்கு வரக்கூடும். தெருக்களில் நடக்கும்போது அழைப்பில் இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்கை விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் அவர்கள் மேற்கொள்வார்கள் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இது ஜப்பானில் இதுபோன்ற முதல் மசோதாவாகும்
Also Read | மைனர் சகோதரியின் கற்பழிப்புக்கு திஹார் சிறையில் பழிவாங்கிய கைதி
அமெரிக்க கணக்கெடுப்பின்படி, நாட்டில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் கார் விபத்துக்கள் நிகழ்கின்றன, இதில் 25 சதவீத விபத்துக்கள் வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவதால் ஏற்படுபவை.
உலக சுகாதார அமைப்பின் (WHO) மதிப்பீடுகளின்படி, மொபைல்களின் பயன்பாடு விபத்துக்களின் எண்ணிக்கையை நான்கு மடங்கு அதிகரிக்கிறது. ஆஸ்திரேலியாவில், ஏற்படும் மொத்த விபத்துகளில் 9 சதவீத ஆபத்தான கார் விபத்துக்களுக்கு காரணம் வாகன ஓட்டிகள் மொபைல் பேசியதால் ஏற்பட்டவை என்று மதிப்பிட்டுள்ளது.
ஹார்வர்ட் மையத்தின் இடர் பகுப்பாய்வின்படி, கார் ஓட்டிக் கொண்டே குறுஞ்செய்தி அனுப்பும்போது ஏற்படும் கவனக் குறைவினால் ஆண்டுதோறும் 3,30,000 பேர் காயமடைகின்றனர்.