அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump), கறுப்பின அமெரிக்கர்களை (Black Americans) விட வெள்ளை அமெரிக்கர்கள் (White Americans) அதிக அளவில் சட்ட அமலாக்கப் பிரிவினரின் நடவடிக்கைகளால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
சிபிஎஸ் நியீசிற்கு அளித்த ஒரு பேட்டியின் போது டிரம்ப் இவ்வாறு கூறினார். ஜார்ஜ் ஃபிலாய்டின் (George Floyd) மரணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, அது ஒரு பயங்கரமான துரதிஷ்டவசமான சம்பவம் என்று டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார்.
சட்ட அமலாக்கத்தினரால் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் ஏன் இன்னும் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று மேலும் கேட்கப்பட்டபோது, ட்ரம்ப், “வெள்ளையர்களும்தான் இறந்துகொண்டிருக்கிறார்கள்... என்ன ஒரு பயங்கரமான கேள்வி இது? வெள்ளையர்களும்தான் இறந்து கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் வெள்ளை அமெரிக்கர்கள்தான் அதிகமாக இறக்கிறார்கள்” என்று டிரம்ப் மேலும் கூறினார்.
மினியாபோலிஸில் ஒரு கறுப்பின மனிதர் கொல்லப்பட்ட பின்னர் பொலிஸ் சீர்திருத்தத்தை கோரி பெருகிய எதிர்ப்பு அலை அமெரிக்கா (America) முழுவதும் பரவியது
மே 25 ஆம் தேதி ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற 46 வயதான கறுப்பர் ஒரு வெள்ளை அதிகாரியின் முழங்காலால் ஒன்பது நிமிடங்கள் கழுத்தில் பிணைக்கப்பட்டு இறந்தார். இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின.
ALSO READ: உலகிலேயே US-ல் தான் COVID-19 பரிசோதனை அதிகம் நடத்தபடுகிறது: டிரம்ப்
பெரிய நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரபலங்களின் ஆதரவோடு பிளாக் லைவ்ஸ் மேட்டருக்கான (Black Lives Matter) பிரச்சாரம் நாடு முழுவதும் பரவியது. இன சமத்துவத்திற்கான கோரிக்கை புதுப்பிக்கப்பட்ட வடிவில் எழும்பிக்கொண்டிருக்கிறது.
சட்ட அமலாக்க பிரிவினரால் கறுப்பின ஆண்களும் பெண்களும் கொல்லப்படுவதற்கு எதிராக வீதிகளில் போராட்டம் செய்தவர்களுக்கு அமெரிக்க டெமோக்ராட் கட்சியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் ஆதரவளித்ததாகவே தெரிகிறது. எனினும் காவதுறைக்கு எதிராக அக்கட்சி எந்த வித நிலைப்பாட்டையும் இன்னும் எடுக்கவில்லை.