வடகொரியா மிரட்டல்: கண்டம் விட்டு கண்டம் ஏவுகணை சோதனை

Last Updated : Jan 9, 2017, 01:09 PM IST
வடகொரியா மிரட்டல்: கண்டம் விட்டு கண்டம் ஏவுகணை சோதனை title=

வடகொரியா நாடு கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உலகநாடுகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறியும், கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியதாகவும் வடகொரியா அறிவித்தது. வடகொரியாவின் இந்த செயலுக்கு தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா. சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன. வடகொரியாவின் செயலை அமெரிக்காவும் கடுமையாக எதிர்த்து வருகிறது. 

இந்த நிலையில், இதுக்குறித்து பெயர் வெளியிட விரும்பாத வடகொரியாவின் வெளியுறவு அதிகாரி ஒருவர் கூறும் போது:- கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணை சோதனையை நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை எப்போதும் வேண்டுமானாலும் சோதனையிட தயாராக இருப்பதாக தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஆஷ் கார்டர் கூறியதாவது வடகொரியாவின் ஏவுகணைகளும் அணு ஆயுதங்களும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும். எங்களுக்கு அச்சுறுத்தலாக அந்த ஏவுகணைகள் இருந்தால் அதை சுட்டு வீழ்த்துவோம். எங்கள் பிராந்திய பகுதியை நோக்கியோ அல்லது எங்கள் கூட்டாளி நாடுகளை நோக்கியே எந்த ஏவுகணைகள் வந்தால் சுட்டுவீழ்த்தப்படும் என்றார். 

Trending News