பாக்., முன்னாள் அதிபர் முசாரப்பைக் கைது செய்ய உத்தரவு!

பாக்கிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முசாரப் அவர்களை கைது செய்யவும் அவர் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

Last Updated : Mar 10, 2018, 12:53 PM IST
பாக்., முன்னாள் அதிபர் முசாரப்பைக் கைது செய்ய உத்தரவு! title=

பாக்கிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முசாரப் அவர்களை கைது செய்யவும் அவர் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

கடந்த 2007-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அதிபராக பர்வேஸ் முசாரப் இருந்தபோது நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தார். அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகளைச் சிறை வைத்தார், மேலும் நூற்றுக்கு மேற்பட்ட நீதிபதிகளைப் பதவியில் இருந்து நீக்கினார்.

இந்த செயல்பாடுகளினால் அவர் மீது தேசத்துரோக வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால் அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதமே துபாய்க்குச் சென்றுவிட்டார்.

இதனையடுத்து முசாரப் மீதான வழக்கை விசாரித்துவரும் பெசாவர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி யாகியா அப்ரிதி தலைமையிலான சிறப்புத் தீர்ப்பாயம், முசாரப்பைக் கைது செய்து நாட்டுக்குத் திருப்பி அழைத்து வர உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யவேண்டும் எனவும் குறிப்பிடுட்டளது!

Trending News