ஸ்பெய்னின் ட்ராண்சைவா விமானம் ஒன்று, பயணிகளின் கோரிக்கையின் திடீரென தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
ஸ்பெயினின் கிரான் கனேரியா பகுதியில் இருந்து போர்ட்சுகள் சென்ற விமானம் ஒன்று நடுவானில் சென்றுக்கொண்டு இருந்த போது, விமானத்தில் பயணித்த பயணிகள் கொடுத்த புகாரின் பேரில் திடீரென தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணித்த பயணி ஒருவரின் மீது கடும் துர்நாற்றம் வீசியதால் அதை தாங்கிக்கொள்ள முடியாத மற்ற பயணிகள் விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர் பல வாரங்களாக குளிக்காமல் இருப்பது போல் அவர் மீது துர்நாற்றம் வீசியதாக பயணிகள் புகார் அளித்துள்ளனர்.
விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர் விமானம் புறப்படுகையில் வாந்தி எடுத்ததாகவும், அதனால் தான் இந்த துர்நாற்றம் வீசியதாகவும் தெரியவந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் பெயிட் வேன் எனவும் அவர் பெல்ஜியிங் நாட்டினை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விமானத்துறையினர் தரப்பில் தெரிவிக்கையில், சுகாதார நோக்கத்தின் அடிப்படையிலேயே விமானம் திருப்பப் பட்டதாகவும், பின்னர் பயணிகளின் கோரிக்கைகள் போரில் குற்றம்சாட்டப்பட்டவரை வெளியேற்ற விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்