Washington DC-யில் அடுத்த 15 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனம்

அமெரிக்க கேபிட்டலில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய கலவரம் காரணமாக அடுத்த 15 நாட்களுக்கு வாஷிங்டன் டி.சி.யில்  (Washington DC) பொது அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 7, 2021, 06:31 PM IST
  • டிரம்ப்பின் ஆதரவாளர்களின் கலவரம்
  • அமெரிக்க கலவரம் நாட்டின் இறையாண்மைக்கு களங்கம் என உலகத் தலைவர்கள் கண்டனம்
  • வாஷிங்டன் டி.சியில் 15 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம்
Washington DC-யில் அடுத்த 15 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் title=

அமெரிக்க கேபிட்டலில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய கலவரம் காரணமாக அடுத்த 15 நாட்களுக்கு வாஷிங்டன் டி.சி.யில்  (Washington DC) பொது அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய கலவரங்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தில் போலீசார் (Police) சுட்டதில் ஒரு பெண் இறந்தார். இது தவிர, மருத்துவ அவசர நிலை காரணமாக மூன்று பேர் இறந்துள்ளனர்.

52 பேர் கைது  
கேபிடல் ஹில்-இல் (Capitol Hill) நடைபெற்ற வன்முறைத் தாக்குதலைத் தொடர்ந்து, வாஷிங்டன் டி.சி மேயர் 15 நாட்கள் பொது அவசரகாலத்தை அறிவித்தார். அமெரிக்க கேபிடல் கட்டிடத்திற்குள் நுழைந்து அதை முற்றுகையிட முயன்ற டிரம்ப்பின் (Trump) ஆதரவாளர்களால் ஏற்பட்ட கலவரம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதுவரை 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Also Read |  தவறை ஒப்புக்கொண்ட Kim Jong Un: North Korea-வில் மாறுகிறதா சூழல்?

"வாஷிங்டன், டி.சி மேயர் முரியல் பெளசர் பொது அவசர உத்தரவை நீட்டித்துள்ளார் - இதில் ஊரடங்கு உத்தரவும் விதிக்கப்படலாம்.  15 நாட்களுக்கு, அல்லது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் பதவியேற்பதற்கு அடுத்த நாளான ஜனவரி 21 வரை இந்த அவசர நிலை நீடிக்கும்" என்று ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவிக்கிறது.

வாஷிங்டன் டி.சி.யில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இதுவரை 30 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கலவரத்தின்போது, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் அலுவலகம் அமெரிக்க கேபிட்டலைத் தாக்கிய டிரம்ப் ஆதரவாளர்கள், கட்டடத்தை சேதப்படுத்தினர். கலகக்காரர்கள் அவரது அலுவலகத்தில் இருந்த பெரிய கண்ணாடி ஒன்றை சுக்குநூறாக உடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, டிரம்பின் சொந்தக் கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களும், தலைவர்களும் ஜோ பைடனின் வெற்றியை ஆதரித்து பேசத் தொடங்கியுள்ளனர். இந்த கலவரத்தை எதிர்க்கும் எம்.பிக்கள், இதற்கு காரணம் தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் டிரம்ப் பேசியது தான் என்றும் குற்றம்சாட்டுகின்றனர். 

Also Read | Covid-19 தடுப்பூசி Halal என்றால் இந்தோனேசிய மக்களின் கதி என்ன?

டிரம்பை பதவியில் இருந்து நீக்க அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழி இருப்பதாகவும், அதை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழத் தொடங்கிவிட்டன. டிரம்ப் தனது சமூக ஊடக கணக்குகளில் பதிவிட்டவை, கலவரத்தை தூண்டுபவையாக இருந்தன என்று கூறி அவரது சமூக ஊடக கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. பேஸ்புக், டிவிட்டர் அகியவை 12 மணி நேரமும், இன்ஸ்ட்ராகிராம் கணக்கு 24 மணி நேரமும் முடக்கப்பட்டது.

அதேபோல், டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப், கலவரக்காரர்களை தேச அபிமானிகள் என்று கூறி போட்ட சமூக ஊடகப் பதிவுக்கு கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, அவர் அந்த பதிவை நீக்கினார்.

இதற்கிடையில், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனின் (Joe Biden) வெற்றியை ஆட்சேபித்த கோரிக்கையை மறுதலித்த சபை, பிடனுக்கு பெரும்பான்மை ஆதரவை கொடுத்தது. அரிசோனாவில் அவரது வெற்றி ஒப்புக்கொள்ளப்பட்டது. ஜார்ஜியா செனட் இரு இடங்களையும் ஜனநாயகக் கட்சியினர் வென்ற ஒரு நாளுக்குப் பிறகு இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது இது அமெரிக்க செனட் மீது கட்சியின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

Also Read | எந்த நொடியிலும் போருக்கு தயாராக இருங்கள்: சீன இராணுவத்திற்கு உத்தரவிட்ட Xi Jinping

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Trending News