பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இதுவரை இல்லாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மக்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பிரதமராக இருந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கே நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்கே, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வாஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தை அணுகியுள்ளதாகவும், இதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜியேவாவுடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | Sri Lanka Crisis: பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் பெண்கள்; நெஞ்சை உருக்கும் அவல நிலை
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தை கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கிய நிலையில், ஆறு மாதங்களுக்கு நாட்டின் பொருளாதார நிலையைச் சமாளிக்க இலங்கை 6 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் சிலோன் மின்சார வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ரணில் விக்கிரமசிங்கே, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக இருந்தால் இந்தியாவிடம் உதவி கேட்கக்கோரி என்னிடம் கேட்காதீர்கள். எந்த நாடும் எரிபொருளுக்கும், நிலக்கரிக்கும் பணம் தருவதில்லை. இந்தியா மட்டுமே தருகிறது. இந்தியாவுடனான கடன் வரம்பும் முடிவடையும் தருவாயில் உள்ளது எனக் கூறினார்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR