ரஷியாவிடம் ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை :அமெரிக்கா எச்சரிக்கை

ரஷியாவிடம் இருந்து பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று மீண்டும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 4, 2018, 02:09 PM IST
ரஷியாவிடம் ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை :அமெரிக்கா எச்சரிக்கை

ரஷியாவிடம் இருந்து பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று மீண்டும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ரஷியாவிடம் இருந்து எஸ்-400 வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை சுமார் ரூ.40 ஆயிரம் கோடிக்கு வாங்க இந்தியா திட்டமிடப்பட்டுள்ளது. இதுக்குறித்து கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவாரத்தை நடைபெற்று வந்தது. இந்த பேச்சுவாரத்தை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

இந்நிலையில், புதுடெல்லியில் இந்தியா - ரஷியா பங்கேற்கும் 19_வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவுக்கு இன்று வருக்கிறார். இந்த வருகையின் போது பிரதமர் மோடியை சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்த சந்திப்பின் போது இருநாடுகளுக்கிடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. அதில் குறிப்பாக, ரஷியாவின் அதிநவீன எதிர்ப்பு ஏவுகணையான எஸ்-400 விமானம் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், இந்தியாவின் பாதுகாப்பு பல மடங்கு உயரும்.

ஆனால் அங்கு ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு சட்டத்திருத்தம் (CAATSA) கொண்டு வரப்பட்டது. அதில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் போன்ற நாடுகளிடமிருந்து போர் ஆயுதங்களை வாங்கக் கூடாது. மீறி வாங்கினால், வாங்கும் நாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அந்த சட்டத்திருத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதைக் காரணம் காட்டி, இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுக்குறித்து அமெரிக்க கூறுகையில், அமெரிக்காவின் நட்பு நாடான இந்தியா ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கக்கூடாது. மீறி ரஷியாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்கினால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதிக்க வாய்ப்பு இருக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் இந்தியா மற்றும் ரஷ்யா உறவில் பாதிப்பும் ஏற்படுமா? என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டபோது, பாதிப்பை ஏற்ப்படுத்த அமெரிக்காவை மத்திய அரசு அனுமதிக்காது எனக் கூறினார். மேலும் இது சம்பந்தமாக அமெரிக்காவுக்கு கோரிக்கை விடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

More Stories

Trending News