செளதி அரசவையில் இளவரசி ரீமா பிண்ட் இடம்பெறுகின்றார்!...

செளதி அரேபியாவின் இளவரசி ரீமா பிண்ட் பாண்டார் அல் சவுத்; அமெரிக்காவுக்கான தூதராக செளதி அரேபியா அறிவித்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Mukesh M | Last Updated : Feb 24, 2019, 01:56 PM IST
செளதி அரசவையில் இளவரசி ரீமா பிண்ட் இடம்பெறுகின்றார்!... title=

செளதி அரேபியாவின் இளவரசி ரீமா பிண்ட் பாண்டார் அல் சவுத்; அமெரிக்காவுக்கான தூதராக செளதி அரேபியா அறிவித்துள்ளது!

இதன் மூலம் செளதி அரசவையில் தூதர் பதவியை ஏற்கும் முதல் பெண்மணி என்னும் பெருமையினை இவர் பெருகின்றார்.  ரீமா பிண்டின் நியமனம் குறித்த அறிக்கை நேற்று (சனிக்கிழமை) அரசு ஆணை மூலம் தெரிவிக்கப்பட்டது.

சௌதி இளவரசி ரீமா, தனது குழந்தை பருவத்தின் பாதியை அமெரிக்காவின் வாஷிங்கடனில் கழித்தார். ரீமாவின் தந்தை பண்டார் அல் சுல்தான் சவுத் அமெரிக்க தூதர் பொறுப்பில் 1983-ஆம் ஆண்டிலிருந்து 2005 வரை இருந்தார். அவரின் பதவி காரணமாக ரீமா தனது குழந்தை பருவத்தை அமெரிக்காவில் கழிக்க நேர்ந்தது. 

ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் அருங்காட்சிய படிப்புகளுக்கான பட்டம் பெற்றுள்ளார் ரீமா. 2005-ஆம் ஆண்டு ரியாத் திரும்பிய பிறகு பொது மற்றும் தனியார் துறையில் பணியாற்றி வந்தார் ரீமா.

ரியாதில் உள்ள ஹார்வி நிக்கோலஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் ரீமா செயல்பட்டுள்ளார்.

ஆண் பெண் சமத்துவம் குறித்து அதிகம் விமர்சிக்கப்படும் செளதி அரேபியாவில் இளவரசி ரீமா பெண்களுக்கான உரிமைகள் குறித்து பேசி வருகிறார்.

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் இறப்பை அடுத்து எழுந்த சர்வதேச கண்டனங்களை அடக்க செளதி அரேபியா முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது ரீமா-வின் நியமனம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜமால் கஷோக்ஜி தொடர்பாக பல முரணான தகவல்களை தந்தபின் இறுதியாக இஸ்தான்புல்லில் உள்ள தனது நாட்டின் தூதரகத்தின் உள்ளே கொலை செய்யப்பட்டார் என்று செளதி அரசு ஒப்புக் கொண்டது.

எனினும் கஷோக்ஜியின் கொலையில் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு ஏதும் இல்லை என செளதி அரசாங்கம் மறுத்து வருகிறது ஆனால் இது தொடர்பாக அமெரிக்க உளவுத் துறை தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரிக்க வேண்டும் என வெள்ளை மாளிகைக்கு அமெரிக்க சட்ட வல்லுநர்கள் அழுத்தம் கொடுக்க முயற்சித்து வருகின்றனர். எனெனில் வாஷிங்டன் போஸ்டில் பத்தி எழுத்தாளராக இருந்த ஜமால் கஷோக்ஜி செளதி அரேபியாவை கடுமையாக விமர்சித்து வந்தார். 

ரீமா பிண்ட் பதவியேற்கவுள்ள அமெரிக்க தூதர் பொருப்பில் தற்போது இளவரசர் காலித் பின் சல்மான் இருந்து வருகிறார். அவர் தற்போது நாட்டின் துணை பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ரீமா பிண்ட் இப்பதவியில் அமர்த்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News