Taylor Swift: 'Folklore'மூலம் புதிய சாதனைப் பதிவை உருவாக்கிய பாடகி...

அமெரிக்க பாடல் ஆசிரியர் மற்றும் பாடகியான Taylor Swift-இன் புதிய ஆல்பம் பல சாதனைப் பதிவுகளை செய்திருக்கிறது. அவரது சமீபத்திய 'Folklore' அவரது ரசிகர்களுக்கு புதிய இசையை வழங்கியிருக்கிறது. உலகில் அதிக பில்போர்டு ஹாட் 100 வெற்றிகளைப் பெற்ற ஒரே பெண் கலைஞர் Taylor Swift தான்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 4, 2020, 02:52 PM IST
Taylor Swift: 'Folklore'மூலம் புதிய சாதனைப் பதிவை உருவாக்கிய பாடகி... title=

அமெரிக்க பாடல் ஆசிரியர் மற்றும் பாடகியான Taylor Swift-இன் புதிய ஆல்பம் பல சாதனைப் பதிவுகளை செய்திருக்கிறது. அவரது சமீபத்திய 'Folklore' அவரது ரசிகர்களுக்கு புதிய இசையை வழங்கியிருக்கிறது. உலகில் அதிக பில்போர்டு ஹாட் 100 வெற்றிகளைப் பெற்ற ஒரே பெண் கலைஞர் Taylor Swift தான்.

இசை ஆல்பம் வெளியான முதல் வாரத்தில், Folklore அமெரிக்காவில் 8,46,000 என்ற அளவில் விற்றுத் தீர்ந்தது. இது இன்றுவரை அதிகம் விற்பனையான ஆல்பம் என்ற பெயரைப் பெற்றது. இதற்கு முன்னதாக Juice WRLDயின் ‘Legends Never Die’ என்ற ஆல்பம் வெளியான முதல் வாரத்தில் சுமார் 500,000 யூனிட்டுகள் விற்கப்பட்டன.இப்போது அந்த சாதனையை முறியடித்து புதிய மைல்கல் சாதனையை உருவாக்கியுள்ளது Folklore.

இசை ஆல்பங்களின் தரவரிசையில் விற்பனையின் அடிப்படையில் முதல் 100 இடங்களை பட்டியலிடும் Billboard Hot 100 என்ற வரையறையை தாண்டிவிட்டார் ஸ்விஃப்ட். 31 வயதான Taylor Swift-இன் `Cardigan` ஹாட் 100 இல் முதலிடத்தைப் பெறுகிறது மற்றும் தரவரிசையில் நிலையான பதிப்பின் மொத்தம் 16 பாடல்கள் அவரது உள்ளீடுகளின் அளவை 97இல் இருந்து113 ஆக உயர்த்தின.

பாடகிகளின் இசை ஆல்பங்களின் விற்பனைப் பட்டியலில், தற்போது 113 புள்ளிகளுடன் Taylor Swift முதலிட்த்தில் இருக்கிறார். Nicki Minaj 110 அவரையடுத்து , Aretha Franklin 73 புள்ளிகளுடன் இருக்கின்றனர்.

Trending News