முன்னாள் காதலியின் முகத்தில் Biscuit எறிந்த காதலன் கைது!

தனது முன்னாள் காதலியினை பழிவாங்குவதற்காக காதலியின் மீது பிஸ்கட் பாக்கெட்டினை எறிந்த காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Aug 22, 2018, 03:57 PM IST
முன்னாள் காதலியின் முகத்தில் Biscuit எறிந்த காதலன் கைது!

கிழக்கு நாஸ்வெய்ல்: தனது முன்னாள் காதலியினை பழிவாங்குவதற்காக காதலியின் மீது பிஸ்கட் பாக்கெட்டினை எறிந்த காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!

ஐக்கிய நாடுகளின் கிழக்கு நாஸ்வெய்ல் பகுதியை சேர்ந்துவர் Jeffrey Tomerlin. கடந்த திங்கள் அன்று தனது முன்னாள் காதலியினை வேறொரு நபருடம் காரில் செல்வதை பார்த்து ஆத்திரம் கொண்டுள்ளார்.

இதனையடுத்து தன் கையில் இருந்து பிஸ்கட் பாக்கெட் கொண்டு காதலியின் முகத்தில் எறிந்து தனது ஆத்திரத்தினை தீர்த்துக்கொண்டுள்ளார். மேலும் காரில் இருந்தபடியே தனது முன்னாள் காதலியையும், அவருடன் இருந்து புதிய நபரையும் Jeffrey Tomerlin திட்டி தீர்த்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது சம்பவயிடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் Jeffrey Tomerlin-னை கைது செய்துள்ளனர். பொது இடத்தில் ஒழுக்ககேடாக செயல்பட்டதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இச்சமவத்தை அடுத்து Jeffrey Tomerlin-ன் முன்னாள் காதலி சம்பவயிடத்தில் இருந்து உடனடியாக தப்பிச்சென்றுள்ளார். இச்சம்பவத்தில் இவருக்கு இவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க.கது