திகில்: நீச்சல் குளத்தில் புகுந்து தம்பதியைத் தாக்கிய முதலை

Updated: Nov 3, 2016, 01:59 PM IST
திகில்: நீச்சல் குளத்தில் புகுந்து தம்பதியைத் தாக்கிய முதலை
Pic Grab :Youtupe

ஸிம்பாப்வே நாட்டின் கார்பியா நகரில் உள்ள ஒரு ஹோட்டலின் நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருந்த தம்பதியரை ஒரு முதலை திடீர்ரென வந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்பியா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த அச்சம்பவம் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தது. நீச்சல் குளத்தை நோக்கி மெல்ல நகர்ந்து வந்த முதலை குளத்தில் குதித்தது. முதலையைக் கண்ட கணவர் குளத்தில் இருந்த உடனே வெளியேறினார். அந்த பெண் முதலையிடம் இருந்து தப்பிக்க குளத்தின் ஓரத்திற்கு வேகமா செல்ல முயன்றார். ஆனால் முதலை அவரது கையைக் கவ்விவிட்டது. ஒருவழியாக தன்னை தாக்க வந்த முதலையிடமிருந்து அந்த பெண்ணும் தப்பிவிடுகிறார்.

வீடியோ பார்க்க:-