பிரதமரின் கடமைகளை செய்யத் தேவையில்லை: தாய்லாந்து பிரதமரை சஸ்பெண்ட் செய்த நீதிமன்றம்

Constitutional Consequences to Thailand PM: எட்டு ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக இருக்கக்கூடாது என்ற மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரதமரை சஸ்பெண்ட் செய்தது: இது தாய்லாந்து நாட்டு பிரதமரின் கதை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 25, 2022, 09:18 AM IST
  • எட்டு ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக இருக்கக்கூடாது
  • பிரதமரை சஸ்பெண்ட் செய்த உச்ச நீதிமன்றம்,
  • இது தாய்லாந்து நாட்டு பிரதமரின் கதை
பிரதமரின் கடமைகளை செய்யத் தேவையில்லை: தாய்லாந்து பிரதமரை சஸ்பெண்ட் செய்த நீதிமன்றம் title=

புதுடெல்லி: தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவை அந்நாட்ட்டு நீதிமன்றம் பதவியில் இருந்து விலகியிருக்க சொல்லிவிட்டது. பதவியில் இருப்பதற்கான தாய்லாந்து நாட்டின் சட்டத்தை அவர் மீறிவிட்டது தொடர்பான விவகாரத்தை இறுதி செய்யும் வரை, தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பிரதமராக செயல்படமாட்டார் என்று தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. பிரயுத்தின் பதவிக் காலத்தை வரம்புக்குட்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க போதுமான காரணம் உள்ளது என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

பிரதமர் பதவியில் இருந்து பிரயுத் சான் ஓச்சாவை நீதிமன்றம் நீக்கியது
பிரதமரின் கால வரம்பு நிர்ணயம் தொடர்பான மனுவை விசாரித்த தாய்லாந்து நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றத்தின் சட்ட அமர்வின் நீதிபதிகள் ஐவரில் நான்கு பேர், பிரயுத் பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டனர்.

மேலும் படிக்க | குரங்கம்மை எச்ஐவி கொரோனா என பல வைரஸ்களால் தாக்கப்பட்ட உலகின் முதல் மனிதன்

தாய்லாந்தின் அடுத்த பிரதமர் யார்?
இந்த விவகாரம் குறித்து தகவல் தெரிவித்த பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் அனுச்சா பி, பிரதமரின் பணிக்கான பொறுப்பை துணைப் பிரதமர் பிரவித் வோங்சுவான் ஏற்பார் என்று கூறினார். தாய்லாந்து நாட்டின் அரசியலமைப்பு சட்டங்களின் படி, பிரதமரின்  அதிகபட்ச பதவிக் காலம் எட்டு ஆண்டுகள் தான்.  

ஆனால் அதை மீறி பிரதமராக பதவி வகித்துவந்த தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓச்சாவுக்கு, நீதிமன்றத்தின் முடிவு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த தீர்ப்பு வழங்கிய பிறகு, பாங்காக்கில் உள்ள அரசு மாளிகையில் நடந்த புகைப்பட அமர்வின் போது அவர் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தார் பிரயுத் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மனிதனிடம் இருந்து விலங்குகளுக்கு பரவும் குரங்கம்மை நோய்

2014 இல் ஆட்சி கவிழ்ப்பு
தாய்லாந்து பிரதமராக இருந்த பிரயுத் சான்-ஓச்சா, முன்னாள் ராணுவத் தளபதி என்பது குறிப்பிடத்தக்கது. 2014 இல் ஆட்சி கவிழ்ப்பை நடத்திய பிரயுத்தின் எதிர்ப்பாளர்கள், அவர் பிரதம மந்திரி எட்டு ஆண்டுகள் பதவியில் இருக்க அனுமதிக்கும் சட்டத்தை மீறியதாக வாதிடுகின்றனர்.

பிரயுத் அதிகாரப்பூர்வமாக 24 ஆகஸ்ட் 2014 அன்று பிரதமராக பதவியேற்றார். தற்போதைய அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதிலிருந்து அவரது பதவிக்காலம் கணக்கிடப்பட வேண்டும் என்று பிரயுத்தின் ஆதரவாளர்கள் தங்கள் வாதத்தை முன் வைக்கின்றனர். நாட்டின் அரசியலமைப்பு 2017 இல் நடைமுறைக்கு வந்தது.

மேலும் படிக்க | கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 27 சதவீதம் பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News