Top 10 உலகச் செய்திகள்: அமெரிக்கா முதல் ரஷ்யா வரை...

அமெரிக்கா, கோவிட் தடுப்பூசி, ரஷ்யா, நோபல் பரிசு என பலவிதமான செய்திகளின் கதம்பம் இது. இன்றைய உலக நடப்பு தொடர்பான முக்கிய செய்திகளின் தொகுப்பு...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 7, 2020, 10:59 PM IST
  • 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள மா சேதுங்கின் (Mao Zedong) கையெழுத்துப் பிரதி இரண்டாக கிழிந்திருப்பதாக ஹாங்காங் போலீசார் தகவல்.
  • 70 மற்றும் 80களில் உலகையே தனது கிட்டார் இசையால் ஆக்ரமித்திருந்த Eddie Van Halen 65 வயதில் இறந்தார்.
  • கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு செப்டம்பர் 0.05 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் அதிகரித்துள்ளது.
Top 10 உலகச் செய்திகள்: அமெரிக்கா முதல் ரஷ்யா வரை... title=

புதுடெல்லி: அமெரிக்கா, கோவிட் தடுப்பூசி, ரஷ்யா, நோபல் பரிசு என பலவிதமான செய்திகளின் கதம்பம் இது. இன்றைய உலக நடப்பு தொடர்பான முக்கிய செய்திகளின் தொகுப்பு...

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்கா H-1B விசாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கிறது

'இலக்கு வைக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் தவிர்க்க முடியாதவை': நவல்னிக்கு நஞ்சு கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ரஷ்யாவை எச்சரிக்கிறது ஜெர்மனி. முதலில் சைபீரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னி, பின்னர் ஆகஸ்ட் பிற்பகுதியில் ஜெர்மனியின் பெர்லினில் Charite மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

300 மில்லியன் டாலர் மதிப்புள்ள மா சேதுங்கின் (Mao Zedong) கையெழுத்துப் பிரதி இரண்டாக கிழிந்திருப்பதாக ஹாங்காங் போலீசார் தகவல். இரண்டு வெண்கல நாணயங்களுடன் கைரேகை பிரதி மீட்கப்பட்டதாக உள்ளூர் போலீசார் தெரிவித்தனர்.

70 மற்றும் 80களில் உலகையே தனது கிட்டார் இசையால் ஆக்ரமித்திருந்த Eddie Van Halen 65 வயதில் இறந்தார்.  

Emmanuelle Charpentier மற்றும் Jennifer A. Doudna இருவருக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. "மரபணு தொழில்நுட்பத்தின் கூர்மையான கருவிகளில் ஒன்றான CRISPR / Cas9 மரபணு கத்தரிக்கோல்" கண்டுபிடித்ததற்காக அவர்களுக்கு விருது வழங்கப்பட்டதாக நோபல் குழு கூறியது.

விரிவான செய்தி | வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பெண் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது!

அமெரிக்க தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னதாக, வெள்ளை மேலாதிக்க குழுக்கள் வேறு எந்த உள்நாட்டு தீவிரவாத இயக்கத்தையும் விட நாட்டில் அதிக ஆபத்தான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. 

ராணுவ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் ஓவல் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.  

Neo-Nazi குழு ஒரு குற்றவியல் அமைப்பு என கிரேக்க நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இந்தக் குழுவோடு தொடர்புடைய தலைவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் உறுதி.

2020ஆம் ஆண்டின் வெப்பமான மாதம் செப்டம்பர் மாதம் என கோப்பர்நிக்கஸின் வானிலை சேவை அறிக்கை கூறுகிறது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு செப்டம்பர் 0.05 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பம் அதிகரித்திருந்தது.

நம்ப முடியவில்லையா? படித்துப் பாருங்கள் | கொரோனா காலத்தில் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகையை கொடுக்கும் நாடு எது தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News